தர்மதுரை 2 படத்தின் அப்டேட்... விரைவில் வெளியாகும் என அறிவிப்பு!
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, தமன்னா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2016ல் வெளியான படம் தர்மதுரை.
சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது.
இந்நிலையில் இந்தப் படத்தில் இரண்டாவது பாகம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் அப்டேட் தெரிவித்துள்ளார்.

தர்மதுரை படம்
நடிகர் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே உள்ளிட்டவர்களின் நடிப்பில் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த 2016ல் வெளியான படம் தர்மதுரை. ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், அவற்றால் அவன் எதிர்கொள்ளும் சூழல்களை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது.

பாடல் வரிகளுக்கு தேசிய விருது
படத்தில் ராதிகா சரத்குமார், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டவர்களின் கேரக்டர்களும் சிறப்பாக அமைந்திருந்தது. இந்தப் படத்தின் எந்தப் பக்கம் பாடலுக்கு சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருது கிடைத்தது. யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் பாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

வலுசேர்த்த பின்னணி இசை
கதையோட்டத்திற்கு அவரின் பின்னணி இசையும் வலு சேர்த்தது. சமீபத்தில் இந்தப் படத்தின் 5வது ஆண்டு கொண்டாட்டத்தை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேலைகளை சீனு ராமசாமி துவங்கியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் தெரிவித்திருந்தார்.

இரண்டாவது பாகம்
இதனிடையே இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு இளைஞனின் வாழ்க்கை சூழல்களை சீனு ராமசாமி இந்தப் படத்திலும் சிறப்பாக கையாள்வார் என்று கூறப்பட்டுள்ளது.

சிறப்பான திரைக்கதை
தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதி சந்திக்கும் சவால்கள், பிரச்சினைகள் சிறப்பாக கையாளப்பட்டிருந்தது. தர்மதுரை கேரக்டரில் அவர் வாழ்ந்திருந்தார். ஒரு படத்தை பார்க்கும் நினைவின்றி நமது அருகில் ஒரு இளைஞனின் வாழ்க்கை சீரழிவதையும் அவன் அதிலிருந்து வெளிவருவதையும் சிறப்பாக சொல்லியிருந்தார் சீனு ராமசாமி.

விரைவில் அப்டேட்
இதனிடையே தர்மதுரை 2 படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்திலும் விஜய் சேதுபதியே நடிப்பாரா அல்லது வேறு யாராவது ஹீரோ நடிப்பாரா என்பது குறித்தும் விரைவில் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











