Dharmaprabhu Teaser: "அம்மா, சின்னம்மா, ஐயா, சின்னய்யா,"... செம கலாய் கலாய்க்கும் யோகி பாபு!
யோகி பாபு நடித்துள்ள தர்மபிரபு படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சென்னை: தர்மபிரபு படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் படம் தர்மபிரபு. முத்துகுமரன் இயக்கும் இப்படத்தில், வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக் ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகி வரும் இதில், யோகிபாபு எமனாக நடிக்கிறார். அவரது தந்தையாக ராதாரவியும், சித்திரகுப்தனாக ரமேஷ் திலக்கும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து எடிட்டிங் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தர்மபிரபு படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தர்மபிரபு டீசரை வெளியிட்டார்.
டீசரில் இடம்பெற்றுள்ள நகைச்சுவை வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. "பூலோகத்தில்தான் தகுதி இல்லாதவர்களுக்கு பதவி கிடைத்து கொண்டிருந்தது. இப்போது எமலோகத்திலுமா?", "இங்கு எல்லோரும் தகுதியுடன்தான் பதவியில் இருக்கிறார்களா?, அம்மா போனால் சின்னம்மா, ஐயா போனால் சின்னய்யா", "அக்கவுன்டில் பணம் போடுவதாக சொல்லிவிட்டு ஆடைகளாக போட்டுக்கொண்டிருக்கிறாரா... அவர் நமது அக்கவுன்டில் இருக்கிறாரா", என எல்லோரையுமே செமையாக கலாய்த்திருக்கிறார்கள்.
தர்மபிரபு படத்திற்கு ஏற்கனவே எதிர்பார்ப்பு இருந்த நிலையில், நேற்று வெளியான டீசர் அதனை மேலும் அதிகரித்துள்ளது. படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











