அய்யயோ என்ன நடக்குது.. பேஸ்புக்கில் லைவ்வாக டெலிகாஸ்ட்டான தர்மபிரபு.. அதிர்ந்து போன படக்குழு!
சென்னை தர்மபிரபு திரைப்படம் பேஸ்புக்கில் லைவ்வாக ஒளிபரப்பப்பட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடிப்பில் அண்மையில் வெளியான படம் தர்மபிரபு. எமலோக கதையை மையமாக கொண்டு கொஞ்சம் அரசியலை கலந்து நகைச்சுவையாக கொடுத்துள்ளார் இயக்குநர் முத்துக்குமரன்.

இந்தப் படத்தில் ராதாரவி, ரேகா, ரமேஷ் திலக், மனோபாலா, அழகம்பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தர்மபிரபு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
படம் தியேட்டரில் வெளியான உடனே தமிழ் ராக்கரஸில் வெளியானது. இந்நிலையில் இப்படம் தற்போது பேஸ்புக்கில் லைவ்வாக டெலிகாஸ்ட் செய்யப்பட்டது.
இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த வேலையை பார்த்த யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments


Click it and Unblock the Notifications