அப்பா இன்னும் நல்லாத்தான் இருக்காரு.. தர்மேந்திரா மரண வதந்திகளுக்கு மகள் இஷா தியோல் முற்றுப்புள்ளி!
மும்பை: பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் நடிகர்களில் ஒருவரான தர்மேந்திரா உயிரிழந்துவிட்டதாக வெளியான தகவல்களை அவரது மகள் இஷா தியோல் மறுத்துள்ளார். ஏகப்பட்ட மெகா ப்ளாக் பஸ்டர் படங்களில் நடித்திருக்கும் அவர் அரசியலிலும் தடம் பதித்தவர். இந்நிலையில் அவர் கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த சூழலில் அவர் மறைந்துவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், இஷா தியோல் மறுத்துள்ளார்.
ஹிந்தியில் கடந்த 1960ஆம் ஆண்டு வெளியான தில் பி தேரா ஹும் பி தேரே என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர் தர்மேந்திரா. அப்படம் சரியாக ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. பிறகு அடுத்த வருடத்திலிருந்து அவருக்கு வரும் வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கின. அந்த வருடத்தில் இரண்டு படங்களில் நடித்த அவர், அடுத்தடுத்த வருடங்களில் நான்கு படங்கள்வரை நடிக்க ஆரம்பித்தார்.
மெகா ஹிட்டுகள்: அப்படி அவர் நடித்த படங்களில் ஏகப்பட்ட ஹிட் படங்கள் அமைந்தன. அவற்றில் முக்கியமானது அமிதாப் பச்சனுடன் நடித்த ஷோலே. இன்றுவரை அப்படம் போல் இரண்டு பெரிய ஹீரோக்களை வைத்து ஒரு படம் செய்ய முடியவில்லை என்பதுதான் நிலைமை. இதன் தமிழ் ரீமேக்கில் ரஜினியும், கமலும் நடிக்க வேண்டும் என சில வருடங்களுக்கு முன்பு ரசிகர்கள் கோரிக்கை வைத்தது நினைவுகூரத்தக்கது.

300 படங்களுக்கும் மேல் நடித்த அவர் தயாரிப்பாளராகவும் வெற்றியை சந்தித்தவர். கிட்டத்தட்ட ஆறு தலைமுறையாக அவர் பாலிவுட்டில் நிலைத்திருந்தார். ஒரே வருடத்தில் எட்டு படங்கள் ஹிட் கொடுத்து கெத்து காண்பித்தார்.அந்த ரெக்கார்டை இன்று பாலிவுட்டில் எந்த நடிகராலும் முறியடிக்கவில்லை என்பது அவர் எவ்வளவு பெரிய ஜித்தாக இருந்தார் என்பதை உணர்த்தும்.
அரசியல்வாதி தர்மேந்திரா: நடிப்பில் எப்படி தனக்கான தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினாரோ அதேபோல் அரசியலிலும் ஜொலித்தவர். பாஜக சார்பில் கடந்த 2004ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாக பதவி வகித்தார். அவர் எம்.பியானாலும் சினிமாவில் அடைந்த உச்சம் போல் அரசியலில் தொட முடியவில்லை. இதற்கிடையே நடிகை ஹேமமாலினியை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு மொத்தம் இரண்டு மகள்கள்.
பத்மபூஷன்: மேலும், பிரகாஷ் கவுர் என்பவரை இரண்டாவது திருமணமும் செய்துகொண்டார். கடந்த 2012ஆம் ஆண்டு அவர் பத்மபூஷன் விருதையும் பெற்ற அவர் He Man என்று ரசிகர்களால் கொண்டாடப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. மெல்ல மெல்ல அனைத்திலிருந்தும் ஒதுங்க ஆரம்பித்த அவருக்கு சமீபமாக உடல்நிலை சரியில்லாமல் போனது.
தொடர்ந்து சிகிச்சை: அவரது உடல்நலத்தில் குடும்பத்தினரும், நண்பர்களும் ரொம்பவே அக்கறையோடு இருந்தார்கள். தேவைப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை மருத்துவமனைக்கு சென்றோ இல்லை மருத்துவர்களை தங்களது வீட்டுக்கு வரவழைத்தோ பெற்றுவந்தார்கள்.
அப்பா உயிருடன் தான் இருக்கிறார்: இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்துவிட்டதாகவே பாலிவுட் ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், அப்பா இன்னும் நலமுடன் உள்ளார் என அவரது மகள் இஷா தியோல் சற்றுமுன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தர்மேந்திரா தீவிர சிகிச்சை பிரிவில் உயிரிக்காக போராடி வரும் நிலையில், அவர் குணமாக வேண்டும் என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











