அடேங்கப்பா.. தர்ஷா குப்தா அந்த நிகழ்ச்சிக்கு வராங்களாம். அடுத்த ஷிவானி இவங்கதான் போல!

சென்னை: விஜய் டிவியின் அந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் போட்டியாளராக என்ட்ரி ஆகிறார் நடிகை தர்ஷா குப்தா.

முள்ளும் மலரும், செந்தூரப் பூவே சீரியல்களில் நடித்து பிரபலமான இவர், இன்ஸ்டாகிராமிலும் கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார்.

இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக தர்ஷா கலந்து கொள்கிறார் என விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

இன்ஸ்டா பிரபலம்

இன்ஸ்டா பிரபலம்

ஷிவானி நாராயணன் போலவே இந்த சீரியல் நடிகையும் இன்ஸ்டாகிராமில் வேற லெவல் பிரபலம் தான். ரசிகர்களை சூடேற்றும் வகையில், படு செக்ஸியான போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் நடிகை தர்ஷா குப்தா. இவருக்கும் சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

பிரம்மாண்ட நிகழ்ச்சி

பிரம்மாண்ட நிகழ்ச்சி

பிக் பாஸை தொடர்ந்து விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி உருவாகி வருகிறது. போன சீசனில் வனிதா விஜயகுமார், ரேகா, ரம்யா பாண்டியன், நிஷா எல்லாம் கலக்கிய நிலையில், இந்த சீசன் போட்டியாளர்களை வரிசையாக அறிமுகப்படுத்தி வருகிறது விஜய் டிவி.

ஷகீலா

ஷகீலா

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவங்களாம் கலந்துப்பாங்கன்னு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேற ஒரு சூப்பரான லிஸ்ட் வெளியாகி வருகிறது. பிக் பாஸ் டீம் இதை பார்த்து கொஞ்சம் கத்துக்கோங்க என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். முன்னாள் ஆபாச பட நடிகை ஷகீலா இந்த முறை விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக அறிமுகமாகிறார்.

தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா

80ஸ் 90ஸ் இளைஞர்களின் கனவு தேவதை ஷகீலாவை தொடர்ந்து 2கே இளைஞர்களின் ஹாட் கனவுக் கன்னியாக இருக்கும் தர்ஷா குப்தாவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளது.

தர்ஷா ரசிகர்கள் ஹேப்பி

தர்ஷா ரசிகர்கள் ஹேப்பி

சின்னத்திரை நடிகையும் இன்ஸ்டாகிராம் இளவரசியுமான தர்ஷா குப்தா, தீபாவளி முதல் ஒளிபரப்பாகவுள்ள குக் வித் கோமாளி 2ம் பாகத்தில் போட்டியாளராக கலந்து கொள்வதை அறிந்த அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்று விட்டனர். மேலும், அவர்கள் இன்னொரு கோரிக்கையையும் வைத்து வருகின்றனர்.

அடுத்த ஷிவானி

அடுத்த ஷிவானி

இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்ஸ்டாகிராம் இளவரசியான ஷிவானி நாராயணன் கலந்து கொண்டதை போலவே, அடுத்த வருஷம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷா குப்தாவும் கலந்து கொள்ள வேண்டும் என பிக் பாஸ் ரசிகர்கள் விஜய் டிவிக்கு ஏகப்பட்ட கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். நீங்க கேட்கலன்னாலும் அவங்க வருவாங்க, அதுக்கான ட்ரைனிங் தான் இது என்றும் சிலர் கலாய்த்து வருகின்றனர்.

பாபா மாஸ்டர்

பாபா மாஸ்டர்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த போட்டியாளர்கள் தான் கலந்து கொள்வார்கள் என வெளியான லிஸ்ட்டுக்கும் இப்போ விஜய் டிவி வெளியிட்டு வரும் லிஸ்ட்டுக்கும் சம்மந்தமே இல்லை. ஷகீலா, தர்ஷா குப்தாவை தொடர்ந்து நடன இயக்குநர் பாபா மாஸ்டர் குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொள்கிறார்.

விஜயலக்‌ஷ்மி அக்கா

விஜயலக்‌ஷ்மி அக்கா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை விஜயலக்‌ஷ்மியின் அக்காவான கனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்கிறார். 4வது போட்டியாளர் இவர் தான் என விஜய் டிவி கனியை அறிமுகப்படுத்தியதும் யார் இவங்க என ரசிகர்கள் இணையத்தில் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.

தீபா

தீபா

சினிமா, சின்னத்திரை என கலக்கிய நடிகை தீபா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது போட்டியாளராக அறிமுகமாகி உள்ளார். வரும் தீபாவளி மாலை 6.30 மணி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களை வரிசையாக விஜய் டிவி அறிமுகம் செய்து வருகிறது. இவர்களில் பாதி பேரை அடுத்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X