தாயில்லா இந்த குழந்தைகளுக்கு அனைவரும் தாயே.. தர்ஷாவுக்கு அதுக்குள்ள இவ்ளோ வயசாகிடுச்சா.. நல்ல மனசு!

சென்னை: நடிகை தர்ஷா குப்தா தனது பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்கி தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அதன் புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும், அவளும் நானும், மின்னலே, செந்தூரப்பூவே போன்ற சீரியல்களில் நடித்த பிரபலமான தர்ஷா குப்தா குக் வித் கோமாளி சீசன் 2-வில் போட்டியாளராக பங்கேற்று ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.

Dharsha Gupta Thalaimai Seyalagam OTT

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு இளைஞர்களை தனது ரசிகர்களாக மாற்றிய தர்ஷா குப்தா அடிக்கடி மற்றவர்களுக்கு உணவு வழங்கி சமூக சேவைகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

சீரியல் டு சினிமா: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.3 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களின் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். ருத்ர தாண்டவம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான தர்ஷா குப்தா சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான தலைமைச் செயலகம் வெப்சீரிஸில் போலீஸ் அதிகாரியாக பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்து யோகி பாபுவுக்கு ஜோடியாக மெடிக்கல் மிராக்கிள் படத்திலும் நடித்து வருகிறார்.

Dharsha Gupta Thalaimai Seyalagam OTT

30-வது பிறந்தநாள்: 1994 ஆம் ஆண்டு பிறந்த நடிகை தர்ஷா குப்தா இன்று தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கடந்த ஆண்டு அவரது 29-வது பிறந்தநாளை முன்னிட்டு நீச்சல் குளத்தில் பிகினியுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட செய்திருந்தார்.

தாயில்லா குழந்தைகளுக்கு: ஆனால், இந்த ஆண்டு தனது பிறந்த நாளை குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடியுள்ளார். அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிறந்த குழந்தையையும் பெற்றோர்கள் அநாதைகளாக விட்டுச் செல்ல எப்படித்தான் மனம் வருகிறது என்கிற கேள்வி தான் எழுகிறது. கையில் கைக் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு போஸ் கொடுத்த தர்ஷா குப்தா ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கியும் மகிழ்ந்துள்ளார். "தாயில்லா இந்த குழந்தைகளுக்கு அனைவரும் தாயே.. இன்று என் பிறந்தநாளை முன்னிட்டு தெய்வகுழந்தைகளுடன்" என கேப்ஷன் கொடுத்துள்ளார் தர்ஷா குப்தா.

ரசிகர்கள் வாழ்த்து: நடிகை தர்ஷா குப்தா தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு குக் வித் கோமாளி ரசிகர்கள் முதல் அவரது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X