நல்ல மனசுக்காரி.. ராயபுரம் மீனவ மக்களுக்கு உதவிக் கரம் நீட்டிய தர்ஷா குப்தா.. குவியுது பாராட்டு!
சென்னை: நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் கொரோனா உதவிகளை செய்ய முடியும் என நிரூபித்து காட்டி வருகிறார் நடிகை தர்ஷா குப்தா.
சென்னை ராயபுரத்தில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் புகைப்படங்களை பதிவிட்டு மக்களிடம் பாராட்டுக்களை அள்ளி உள்ளார்.
குக் வித் கோமாளி பிரபலமான இவர், ருத்ரதாண்டவம் படத்தில் நாயகியாக அறிமுகமாக உள்ளார்.

சின்னத்திரை டு சினிமா
சமூக வலைதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை போட்டு டிரெண்ட் செய்து வந்த சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தாவுக்கு குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் கலக்கிய அவருக்கு உடனடியாக ஜி. மோகன் இயக்கும் ருத்ரதாண்டவம் படத்தில் நாயகியாக நடிக்கும் ஜாக்பாடி அடித்தது.

சத்தான உணவு
கொரோனா இரண்டாம் அலை காரணமாக லாக்டவுன் போடப்பட்டு இருக்கும் நிலையில், உணவு இன்றி வாடும் ஏழை மக்களுக்கு நல்ல சத்தான உணவுகளை வழங்கி வருகிறார் நடிகை தர்ஷா குப்தா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதன் புகைப்படங்களை பதிவிட்ட அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நல்ல மனசுக்காரி
கவர்ச்சி கன்னியாக மட்டுமின்றி தான் ஒரு நல்ல மனசுக்காரி என்பதையும் நிரூபித்துள்ளார் நடிகை தர்ஷா குப்தா, சில தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து ஒவ்வொரு பகுதியிலும் இது போன்ற உதவி பணிகளை செய்து வருகிறார் நடிகை தர்ஷா குப்தா.

மாஸ்க்கும் கிளவுசும்
கையில் கிளவுஸ், முகத்தில் மாஸ்க் என முழு பாதுகாப்புடன் மக்களுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை வழங்கி வருகிறார். நடிகை தர்ஷா குப்தாவின் இந்த முயற்சியை பார்த்த ரசிகர்கள் அவரை வாயாற வாழ்த்தி வருகின்றனர்.

ராயபுர மீனவ மக்களுக்கு
பசுமை இயக்கம் எனும் அமைப்புடன் இணைந்து ராயபுரத்தில் வருமானமின்றி தவிக்கும் மீனவ குடும்பத்தினருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கி உள்ளார் நடிகை தர்ஷா குப்தா. தன்னால் முடிந்த சிறிய உதவியை செய்துள்ளதாகவும் மற்றவர்களும் இதுபோன்றவர்களுக்கு உதவ வேண்டும் எனும் கோரிக்கையையும் முன் வைத்துள்ளார்.

தொடர்ந்து செய்வேன்
மேலும், தொடர்ந்து இதுபோன்ற சேவைகளை இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் செய்து மக்களின் துயரை ஆற்றப் போவதாகவும் கூறியுள்ளார் நடிகை தர்ஷா குப்தா. சூப்பர் மேம், நல்ல இதயம் என ஏகப்பட்ட கமெண்ட்டுகளும், லைக்குகளும் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











