டப்பிங் முடிச்சிட்டேன்.. ருத்ர தாண்டவம் படத்தில் தர்ஷா குப்தாவின் லுக்கை பாருங்க.. வைரலாகும் போட்டோ!

சென்னை: அறிமுக படத்தின் டப்பிங் பணியை முடித்து விட்டேன் என நடிகை தர்ஷா குப்தா பதிவிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திரெளபதி படத்தை இயக்கிய இயக்குநர் ஜி. மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் இரண்டாவது படம் ருத்ர தாண்டவம்.

முதல் படத்தை தொடர்ந்து இரண்டாவது படத்திலும் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்து வருகிறார்.

ஹீரோயினாக அறிமுகம்

ஹீரோயினாக அறிமுகம்

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை போட்டு கிறங்கடித்து வந்த குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். தர்ஷா குப்தாவின் அழகுக்கும் கவர்ச்சிக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இருப்பதால், அவரது கோலிவுட் என்ட்ரி கோலாகலமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரெளபதி இயக்குநர்

திரெளபதி இயக்குநர்

நாடக காதலை அம்பலப்படுத்தும் விதமாக இயக்குநர் ஜி. மோகன் இயக்கிய திரெளபதி திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. ஆனாலும், சர்ச்சைகளுக்கு மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பையும் பெற்றது. திரெளபதி படத்தைத் தொடர்ந்து ருத்ர தாண்டவம் படத்தை இயக்கி வருகிறார் ஜி. மோகன்.

அஜித் மச்சான்

அஜித் மச்சான்

திரெளபதி படத்தை திரையரங்கில் குடும்பத்துடன் சென்று பார்த்து தனது சகோதரர் ரிச்சர்ட் ரிஷிக்கு நடிகை ஷாலினி அஜித் தனது முழு ஆதரவை அளித்தார். அஜித் ரசிகர்களும் திரெளபதி படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தனர். இந்நிலையில், ருத்ர தாண்டவம் படத்திலும் ரிச்சர்ட் ரிஷியே நாயகனாக நடித்து வருகிறார்.

கெளதம் மேனன் ஆன்போர்ட்

கெளதம் மேனன் ஆன்போர்ட்

கேஜிஎஃப் நடிகை மாளவிகா அவினாஷ், டத்தோ ராதாரவி என ஏகப்பட்ட பிரபல நடிகர்களை இந்த படத்தில் இயக்குநர் மோகன் களமிறக்கி உள்ளார். அவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல இயக்குநர் கெளதம் மேனனையும் இந்த படத்தில் ஆன்போர்ட் செய்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.

டப்பிங் முடிச்சிட்டேன்

டப்பிங் முடிச்சிட்டேன்

ருத்ர தாண்டவம் படத்தின் படப்பிடிப்புகள் முடிவு பெற்ற நிலையில், டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ருத்ர தாண்டவம் படத்தில் தனது போர்ஷன் டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக போட்டோவுடன் போஸ்ட் போட்டு வைரலாக்கி உள்ளார்.

Recommended Video

Cook With Comali PUGAZH first car | Emotional Story Behind, Pavithra lakshmi, Dharsha Gupta
பெரிய பொட்டுடன்

பெரிய பொட்டுடன்

இன்ஸ்டாகிராமில் வருவது போல கவர்ச்சிகரமாக இருப்பார் தர்ஷா குப்தா என பார்த்தால், வகிடு எடுத்த தலை முடியுடன், சேலை கட்டி, பெரிய பொட்டு வைத்து பார்க்கவே படு பயங்கரமான தோற்றத்தில் மிரட்டுகிறார் தர்ஷா குப்தா. தனது அறிமுக படமான ருத்ர தாண்டவம் படத்தின் ரிலீசுக்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X