சன் ஷைனை பார்க்குறதா? தர்ஷா குப்தாவை பார்க்குறதா? கோவா பீச்சில் பிகினியில் செம ஆட்டம்!
சென்னை: குக் வித் கோமாளி மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா கோவா கடற்கரையில் எடுத்த பிகினி புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகிறார்.
ஜி மோகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் தர்ஷா குப்தா.
சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் ஓ மை கோஸ்ட் படத்திலும் தர்ஷா குப்தா நடித்து வருகிறார்.

சீரியல் டு சினிமா
குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்த சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா, அந்த் ரியாலிட்டி ஷோ முடிவதற்கு முன்னதாகவே ருத்ரதாண்டவம் படத்தில் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் நடிக்க ஒப்பந்தமானார். அந்த படம் வெளியான நிலையில், தொடர்ந்து தர்ஷா குப்தாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

சன்னி லியோன் படத்தில்
ஆபாச நடிகையாக இருந்து கவர்ச்சி நடிகையாக மாறியுள்ள நடிகை சன்னி லியோன் நடிப்பில் தமிழில் உருவாகி உள்ள ஓ மை கோஸ்ட் படத்தில் நடிகர் சதீஷுடன் நடித்து வருகிறார் தர்ஷா குப்தா. அந்த படமும் இந்த ஆண்டுக்குள் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சில தமிழ்ப் படங்களிலும் கமிட் ஆகி வருகிறார் தர்ஷா குப்தா.

இன்ஸ்டாவில் ஹாட் போஸ்
இன்ஸ்டாகிராம் இளவரசியாக வலம் வரும் தர்ஷா குப்தா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ஹாட் போஸ்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். கோலிவுட்டின் கவர்ச்சி இளவரசியாகவும் கனவுக்கன்னியாகவும் மாறியுள்ள தர்ஷா குப்தாவுக்கு 1.9 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர்.

கோவா பீச்சில் ஆட்டம்
படுகவர்ச்சியான குட்டை உடையை உடுத்திக் கொண்டு, கோவா பீச்சில் செம ஆட்டம் போட்டுள்ள வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார் தர்ஷா குப்தா. அவரது கவர்ச்சி தரிசனத்தை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் தலைவி என கமெண்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.

கோவா பட மியூசிக்
கோவா பீச்சில் நடனமாடிய வீடியோவை ஷேர் செய்த நடிகை தர்ஷா குப்தா வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோவா படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பாடலின் இசையை தனது வீடியோவில் இணைத்து யுவனுக்கு தேங்ஸ் கார்டையும் போட்டுள்ளார் தர்ஷா குப்தா.

எதை பார்க்குறது
கடலில் சூரியனை எதிர்நோக்கியபடி முட்டிப் போட்டு மொத்த முதுகழகையும் காட்டியபடி போஸ் கொடுத்துள்ள தர்ஷா குப்தாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எதை பார்க்குறது என்றே தெரியவில்லையே? என டபுள் மீனிங் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

செம பார்ட்டியா
கோவா என்றாலே பார்ட்டி தானே முதலில் நினைவுக்கு வரும் அதற்காகத்தானே அங்கே எல்லோரும் போவார்கள் என்பதால், தர்ஷா குப்தாவின் போஸ்ட்டுக்கு கீழே ஏகப்பட்ட நெட்டிசன்கள் என்ன தர்ஷா குப்தா செம பார்ட்டியா என்றும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். சோ க்யூட், ஹாட் பேபி என எக்கச்சக்க ஹார்டின்களும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











