Bigg Boss Tamil 7: அடேங்கப்பா.. அந்த தாராள குடோவுனே பிக் பாஸுக்கு வருதா.. கிரணெல்லாம் எம்மாத்திரம்!
சென்னை: கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு போட்டியாளராக யங் ஹீரோயின் ஒருவர் வரப்போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில், அதற்கான பரபரப்பான வேலைகளை விஜய் டிவி பார்த்து வருகிறது.

இவங்களாம் வருவாங்களா: இந்த முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக போகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்கள் குறித்த உத்தேச பட்டியல்கள் ஏற்கனவே 18 பேர் கொண்ட பெரிய லிஸ்ட் உடன் வந்திருந்தது.
நடிகை சோனியா அகர்வால், நடிகர் அப்பாஸ், நடிகர் பப்லு, விஜய் டிவியை சேர்ந்த ரக்ஷன், குரேஷி மற்றும் ஜாக்குலின் ஆகிய மூவர் பங்கேற்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் சர்ச்சைக்குரிய நடிகை ரேகா நாயர், நடிகை கௌசல்யா, ரக்ஷிதா கணவர் தினேஷ் உள்ளிட்ட சில பெயர்கள் அடிபட்டு வருகின்றன.
தர்ஷா குப்தா கன்ஃபார்ம்: இந்நிலையில் பிக்பாஸ் 7 வீட்டுக்கு கன்ஃபார்மா வரப்போகும் போட்டியாளர் இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை கிரணை தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி மிஸ் செய்து விட்டதே என்னை புலம்பி வந்த ரசிகர்களுக்கு தாராளத்துக்கு கொஞ்சமும் பஞ்சம் விளைவிக்காத இளம் நடிகை தர்ஷா குப்தா இந்த முறை பிக்பாஸ் போட்டியாளராக பங்கேற்பது உறுதி என்கின்றனர்.
விஜய் டிவியின் சீரியல்களில் நடித்து வந்த தர்ஷா குப்தா குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோலிவுட்டில் ஹீரோயினாக பிஸியாகிவிட்டார்.
சினிமாவில் செல்ஃப் எடுக்கலையா: இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான தர்ஷா குப்தா அடுத்ததாக சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
யோகி பாபு நடித்து வரும் மெடிக்கல் மிராக்கிள் படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ள தர்ஷா குப்தா அடுத்தடுத்த பட வாய்ப்புகள் சரியாக அமையாத நிலையில் தற்போது மீண்டும் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவுக்கு திரும்பப் போகிறார் என்கின்றனர்.
நடிகை தர்ஷா குப்தா பிக்பாஸ் வீட்டுக்கு வந்தால் இந்த சீசன் களைக்கட்டும் என்பது உறுதி என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











