ஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில்... வைரலாகும் தர்ஷா குப்தா ஃபோட்டோஸ்
சென்னை : சின்னத்திரை நடிகையாக அறிமுகமானாலும் விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் பட்டிதொட்டி எல்லாம் புகழடைந்தார் தர்ஷா குப்தா. இந்த நிகழ்ச்சியில் புகழுக்கும், தர்ஷாவிற்குமான கெமிஸ்ட்ரி இந்நிகழ்ச்சியின் டிஆர்பி.,ஐ எகிற வைத்தது.
Recommended Video
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்னரே ஜீ தமிழ் டிவி.,யில் முள்ளும் மலரும், சன் டிவி.,யில் மின்னலே, விஜய் டிவி.,யில் சொந்தூரப்பூவே போன்ற சீரியல்களில் முக்கிய ரோல்களில் நடித்தார் தர்ஷா குப்தா. தற்போது டைரக்டர் மோகன் இயக்க உள்ள ருத்ர தாண்டவம் படத்திலும் தர்ஷா நடிக்க உள்ளார்.

ஃபோட்டோஷுட்டால் பிரபலம்
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் தர்ஷா குப்தா, அடிக்கடி அசத்தல் ஃபோட்டோஷுட் நடத்தி, அந்த ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருபவர். மாடர்ன் உடையில் விதவிதமாக இவர் நடத்தும் ஃபோட்டோஷுட் மிகவும் பிரபலம்.

சமூக சேவையிலும் கலக்கல்
ஃபோட்டோஷுட்டில் மட்டுமல்ல லாக்டவுன் சமயத்தில், உணவின்றி தவிக்கும் பலருக்கும் தேடிச் சென்று உணவளித்தும் சோஷியல் மீடியாவில் பிரபலமாகி விட்டார் தர்ஷா குப்தா. கடந்த சில நாட்களாவே தர்ஷாவின் சமூக சேவை இணையதள வாசிகளால் பெரிய அளவில் புகழப்பட்டு வருகிறது.

ஜாக்கெட் இல்லாத தர்ஷா குப்தா
இந்நிலையில் லேட்டஸ்ட்டாக, பக்கா கிராமத்து பெண் கெட்அப்பில் தர்ஷா நடத்திய ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள் வைரலாகி வருகிறது. அதுவும் ஜாக்கெட் அணியாமல் கிராமத்து பெண் போல் புடவையில், வயல்வெளிகளில் இந்த ஃபோட்டோஷூட்டை இவர் நடத்தி உள்ளார்.

குவியும் லைக்குகள்
டிராக்டர் ஓட்டுவது, வயல்வெளியில் அமர்ந்திருப்பது என கலர்ஃபுல்லாக, கண்ணுக்கு குளிர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ள இந்த ஃபோட்டோக்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றன. இதுவரை கிட்டதட்ட 2 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











