அப்பா அம்மாக்கிட்ட கூட சொல்லிக்காம சனம் ஷெட்டியுடன் நிச்சயம்.. பிரஸ்மீட்டில் உளறி கொட்டிய தர்ஷன்!

Recommended Video

Bigg Boss Tharshan Press Conference | Sanam Shetty | Bigg Boss

சென்னை: பிக்பாஸ் மூலம் பிரபலமான தர்ஷன், தனது பெற்றோருக்கு கூட சொல்லாமல் சனம் ஷெட்டியை நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டது தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தர்ஷன். இவரும் நடிகை சனம் ஷெட்டியும் காதலித்து வந்தனர். தர்ஷன் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பாக இருவரும் திருமண நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர்.

கேரியரை பாதிக்கும் என்பதால் இருவரும் நிச்சயம் ஆனதை மறைத்துள்ளனர். இந்நிலையில் பிக்பாஸில் இருந்து திரும்பிய நிலையில் தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக சனம் ஷெட்டி நேற்று சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

பிடிக்கவில்லை

பிடிக்கவில்லை

மேலும் தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். இந்நிலையில் சனம் ஷெட்டியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் தர்ஷன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சனம் ஷெட்டி பிகினியில் போட்டோ ஷுட் நடத்தியதும் பிகினியில் இன்டர்வியூ கொடுத்ததும் தனக்கு பிடிக்கவில்லை என்றார்.

நைட் பார்ட்டி

நைட் பார்ட்டி

தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது சனம் ஷெட்டி தனது முன்னாள் காதலருடன் நைட் பார்ட்டியில் பங்கேற்றிருந்தார் என்றும் இதையெல்லாம் சொல்லலாமா வேண்டாமா என்று எனக்கு தெரியவில்லை என்றும் தர்ஷன் கூறினார். மேலும் தன்னை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்களிடம் தான் அவரை ஏமாற்றியதாக கூறி என் வாழ்கையை அழிக்கப் பார்த்தார்.

பெற்றோருக்கு தெரியாது

பெற்றோருக்கு தெரியாது

இந்த காரணங்களால்தான் சனம் ஷெட்டியை பிரேக்கப் செய்ததாகவும் கூறினார். அப்போது, பல விஷயங்களை உளறினார் தர்ஷன். சனம் ஷெட்டியை நிச்சயதார்த்தம் செய்தது உண்மைதான் என ஒப்புக்கொண்ட தர்ஷன், தனது அப்பா அம்மா, தங்கைக்கு தெரியாமல்தான் சனம் ஷெட்டியை நிச்சயதார்த்தம் செய்ததாக கூறினார். தனது அண்ணனுக்கு மட்டுமே தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது தெரியும் என்றும் அவர் கூறினார்.

சனம்தான் செய்தார்

சனம்தான் செய்தார்

மேலும் முதலில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஷெரினை சனம் ஷெட்டிதான் அன்ஃபாலோ செய்தார் என்று கூறினார் தர்ஷன். பின்னர் தனது சமூக வலைதள கணக்குகளான டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றை தான் பிக்பாஸில் இருந்து வெளியே வந்து ஒரு மாதம் வரை சனம் தான் ஹேண்டில் செய்தார் என்றார்.

உளறிய தர்ஷன்

உளறிய தர்ஷன்

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் போட்டியாளர்கள் உடன் பேசவே கூடாது என்று சனம் ஷெட்டி டார்ச்சர் செய்ததாகவும் தர்ஷன் கூறினார். சனம் ஷெட்டி செய்த டார்ச்சராலேயே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஷெரினை தான் அன்ஃபாலோ செய்ததாகவும் கூறினார். முதலில் சனம் அன்ஃபாலோ செய்ததாக கூறினார்.

கழட்டி விடுவதா?

கழட்டி விடுவதா?

பின்னர் தானே அன்ஃபாலோ செய்ததாக மாற்றி மாற்றி பேசினார் தர்ஷன். தர்ஷன் இப்படி உளறியதை கவனித்த நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர். எந்த பேரும் புகழும் இல்லாத போது காதலித்தவரை, நிச்சயம் செய்தவரை, பல வாய்ப்புகளை பெற்று தந்தவரை தற்போது படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் கழட்டி விடுவதா என திட்டி தீர்க்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X