வாவ்.. ஃபர்ஸ்ட் லுக்கே மாஸா இருக்கே.. இயக்குநரான தயாநிதி அழகிரி.. ரிலீஸ் பண்ணது யார் தெரியுமா?

சென்னை: கிளவுட் நயன் மூவிஸ் நிறுவனரும் தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரி இப்போ இயக்குநராக மாறி உள்ளார்.

தயாநிதி அழகிரிக்கு தனியாக முன்னுரை ஏதும் தெரியவில்லை. அவர் யாருடைய மகன், யாருடைய பேரன் என்பது தமிழ்நாட்டிற்கே தெரிந்த ஒன்று தான்.

கிளவுட் நயன் மூவிஸ்

கிளவுட் நயன் மூவிஸ்

வாரணம் ஆயிரம், பையா, நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்துள்ளார் தயாநிதி அழகிரி. சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உள்ளிட்டவைக்கு போட்டியாக கிளவுட் நயன் மூவிஸ் தொடங்கிய இவர் தயாரிப்பில் வெளியான முதல் படம் அகில உலக சூப்பர்ஸ்டார் சிவாவின் தமிழ்ப்படம் தான்.

மங்காத்தா தயாரிப்பாளர்

மங்காத்தா தயாரிப்பாளர்

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, ராய் லக்‌ஷ்மி, பிரேம்ஜி, வைபவ், மகத் என மல்டி ஸ்டாரர்கள் நடித்த மங்காத்தா படத்தையும் இவர் தான் தயாரித்தார். தூங்கா நகரம், உதயம் என்.எச்4, தகராறு, வடகறி உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.

இயக்குநர் அவதாரம்

இயக்குநர் அவதாரம்

இந்நிலையில், தற்போது மாஸ்க் எனும் குறும்படத்தை இயக்கி உள்ளார் தயாநிதி அழகிரி. அதன் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது. தயாரிப்பாளராக கலக்கி வந்த தயாநிதி அழகிரி இப்போ இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். சீக்கிரமே திரைப்படத்தையும் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அருள்நிதி ரிலீஸ்

அருள்நிதி ரிலீஸ்

நடிகரும் தயாநிதி அழகிரியின் சகோதரருமான அருள்நிதி இந்த ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளார். மாஸ்க்குக்குள் ஒளிந்திருக்கும் அந்த முகம் யார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சீக்கிரமே பெரிய படம் எடுக்கவும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X