தீ.. தீ..தித்திக்கும் "தீ".... அசத்தல் அறிவின் என்ஜாய் எஞ்சாமி .. வைரலாகும் ஆல்பம் சாங்!

சென்னை : குக்கூ.. குக்கூ முட்டைப்போடும் கோழிக்கு... குக்கூ...குக்கூ ஒப்பனை யாருக்கு மயிலுக்கு என்ற பாடல்வரிகள் அனைவரின் காதுகளையும் இனிமையாக்கி வருகிறது "என்ஜாய் எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி" பாடல்.

Recommended Video

Enjoy Enjaami Album Launch Pressmeet | Singer Dhee, Arivu | Independent Song Launch

தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள 'என்ஜாய் எஞ்சாமி' பாடல் தான் இப்போது அனைவரும் முணுமுணுக்கும் ஒரு டிரெண்டிங் பாடல்.

பலரையும் ரசிக்க வைத்து அனைவரையும் குக்கூ.. குக்கூ என கூவ வைத்து வேறலெவலில் வைரலாகி வருகிறது. எங்கு பார்த்தாலும் தீயின் தித்திக்கும் குரல்தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.

 இனம் புரிய ஈர்ப்பு

இனம் புரிய ஈர்ப்பு

ரவுடி பேபி தீயின் குரலில் ஏதோ மாயஜாலம், இனம் புரியாத ஓர் ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆங்கிலப் பாடலுக்கு இணையாக சந்தோஷ் நாராயணன் இசையமைத்தது, இப்பாடலுக்கு மேலும் மகுடம் சூட்டியது போல் உள்ளது. கண்டா வரச் சொல்லுங்க பாடலில் நம் மனதை கொள்ளை கொண்ட சந்தோஷ் நாராயணனின் மற்றும் ஒரு இசைப்புரட்சி எஞ்சாய் எஞ்சாமி.

 யூடியூப்பில் சாதனை

யூடியூப்பில் சாதனை

இந்த, ஆல்பம் பாடலை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் வெளியிட்டார் வெளியான நாளில் இருந்தே மீண்டும் மீண்டும் ரிப்பீட் மோடில் கேட்கவைத்து டிரெண்டிங்காக இருந்த இந்த ஆல்பம் சாங். தற்போது,யூடியூப்பில் ஒரு மில்லியன் லைக்குகளை கடந்து சாதனைப்படைத்து வருகிறது.

 காம்போ

காம்போ

பாடலாசிரியர் மற்றும் ராப் சிங்கருமான அறிவு இந்த ஆல்பம் பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார். தியும் இவருடன் சேர்ந்து இப்பாடலை பாட 'அறிவுதீ' ஜூவாலையாக இப்பாடலில் பற்றி எரிகிறது. கோழி, மயில், கிளிகள், பூச்சிகள், பறவைகள் மற்றும் விலங்குகள் நிறைந்த இந்த பாடல் வரிகள் அனைவரையும் ஒருமுறை உற்று நோக்க வைத்துள்ளது. ராப், மற்றும் நாட்டுப்புற இசை என இரண்டையும் கலந்த காம்போவாக இந்த பாடல் வெளியாகியுள்ளது.

 ஓய்யாரமான ஆட்டம்

ஓய்யாரமான ஆட்டம்

வித்தியாசமான பின்னணியில், விதவிதமான தோற்றத்தில் கலர் கலரா தோன்றி ஒய்யாரமான ஆட்டம் என பாடல் மிரட்டி உள்ளது. அல்லி மலர் கொடி அங்கதமே.. ஒட்டார ஒட்டார சந்தனமே..முல்லை மலர்க்கொடி முத்தாரே என்ற பாடல் பிரம்மிக்க வைத்து அறிவுக்கு பல சபாஷ்களை போடவைத்துள்ளது.

 ராயல் சல்யூட்

ராயல் சல்யூட்

மிகப்பெரிய அளவில் ஹிட்டான இந்த பாடலை திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி உள்ளனர். விவசாயத்தையும், இயற்கையையும் மையமாக கொண்டு இந்த பாடலை உருவாக்கிய இந்த ஆல்பம் டீமுக்கு ஒரு ராயல் சல்யூட். இறுதியாக ஒரு முறை கூவிவிட்டு போகலாமே, குக்கூ..குக்கூ..கம்புளிப்பூச்சி.. தங்கச்சி..குக்கூ ..குக்கூ..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X