அஜித் ரசிகர்கள் செய்த காரியம்.. சேட்ட புடிச்ச பசங்க சார்.. இணையத்தில் டிரெண்டாகும் மீம்ஸ்!
சென்னை: நடிகர் விஜய்யின் கில்லி படம் கடந்த மாதம் ரீ ரிலீஸ் ஆகி பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடித்த தீனா படம் இன்று ரீ ரிலீஸ் ஆனது. ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரும் நிலையில், ரோகினி தியேட்டரில் அஜித் ரசிகர்கள் செய்த செயல் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.
அண்மைக்காலமாக ரீ ரிலீஸ் ஆகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் புதுப் பொலிவுடன் ரீ ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டது. இதையடுத்து ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு முத்து, படம் வெளியானது. அதே போல, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, 3, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியாகி கணிசமான வசூலை அள்ளியது.

கில்லி ரீ ரிலீஸ்: இந்த படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, கடந்த வாரம் விஜய், த்ரிஷா நடித்த கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆனது. 20 வருடத்திற்கு முந்தைய படம் என்றாலும் அந்த படத்தை தியேட்டரில் தவற விட்ட விஜய் ரசிகர்கள் படத்தை பார்த்து ரசித்தனர். இந்த படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில், படம் முதல் நாளிலே உலகம் முழுவதும் 4 கோடிக்கும் மேல் வசூலித்தது. படம் வெளியாகி இரண்டு வாரத்திற்கும் மேலானாலும், இப்படத்தின் வசூல் குறையாததால், இப்படம், 50 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீனா கொண்டாட்டம்: கில்லி ரிலீஸ் ஆனபோதே அஜித் நடித்த மங்காத்தா படத்தை மீண்டும் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். ஆனால், தியேட்டர்கள் கிடைக்காததால் மங்காத்தா திரைப்படம் வெளியாகவில்லை. இதையடுத்து, அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த தீனா திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி உள்ளது. 23 வருடத்திற்கு முன்னாடி வெளியான படத்தை ரசிகர்கள் வைப் செய்து கொண்டாடி வருகின்றனர்.

பேனரை கிழித்த ரசிகர்கள்: சென்னை காசி தியேட்டரில் தீனா படத்தின் ரீ ரிலீஸை பேனர் வைத்து கொண்டாடிய அஜித் ரசிகர்கள், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்கள். அதனால் அந்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. மேலும் அஜித் ரசிகர் ஒருவர் அதே தியேட்டரில் வைக்கப்பட்டு இருந்த கில்லி படத்தின் பேனரை கிழித்து எழிந்தார். அது மட்டுமில்லாமல் ரோகினி தியேட்டரில் கில்லி திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த போது, தியேட்டருக்குள் புகுந்த அஜித் ரசிகர்கள், கதவை திறந்து அஜித் அஜித் என்று கத்தி படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு தொல்லை கொடுத்தனர்.
கிழி கிழின்னு கிழிச்சிட்டோம்: இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டான நிலையில், அஜித் ரசிகர்களை ட்ரோல் செய்யும் வகையில், மீம்களாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அதில் சில ஜாலியான மீம்களை இங்கே பார்க்கலாம் வாங்க.. ஒரு மீம்ஸ் கிரியேட்டர் வடிவேலுவின் போட்டோவை போட்டு, கில்லி கூட தீனாவ ரீ ரிலீஸ் பண்ணி சும்மா கிழி கிழின்னு கிழிச்சுட்டோம்ல என்றும், அதற்கு எதிரில் இருப்பவர் எப்டி..? என்று கேட்க கில்லி பேனர என்ற மீம் ஒன்று பதவி வருகிறது.
நாங்க தான் மாஸ்: அதே போல மற்றொரு மீம்ஸ் கிரியேட்டர், நானும் ரவுடிதான் படத்தில், ஆர்ஜே பாலாஜி , விஜய் சேதுபதி, நயன்தாரா மூன்று பேரும் பேசிக்கொண்டு இருக்கும் போட்டோவை போட்டு, கில்லி படம் ஓடுற தியேட்டர்ல அஜித் அஜித்ன்னு கத்திட்டு வந்துட்டோம். நாங்க தான் மாஸ் என்று அஜித் ரசிகர்களை பங்கமாக கிண்டலடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











