இலக்கியா தற்கொலை முயற்சிக்கும்.. எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. ஸ்டண்ட் மாஸ்டர் விளக்கம்!
சென்னை: டிக் டாக் செயலி மூலம் பிரபலமான இலக்கியா, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டு வருவதன் மூலம், இரண்டு மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கிறார். இவர் நேற்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், என் சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தான் காரணம். என்னை நம்ப வெச்சி ஏமாத்திட்டான் என பதிவிட்டு இருந்தார்.
இதைத்தொடர்ந்து, டிக் டாக் இலக்கியா அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், போரூர் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர், அழகு மற்றும் உடற்பயிற்சிக்காக கொடுக்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால், அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர் கூறியதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கீழ் பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டிக் டாக் இலக்கியா: இலக்கியா தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தோடு ஊட்டச்சத்து மாத்திரையை சாப்பிட்டாரா என்றும், இதற்கு முன்னணி ஸ்டண்ட் மாஸ்டரான சூப்பர் சுப்பராயனின் மகனான திலீப் சுப்பராயன் தான் காரணம் என செய்திகள் இணையத்தில் பரவி வரும் நிலையில், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கூறியுள்ளார். இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக இதை யாரோ செய்கிறார்கள். இந்த விவகாரத்தை நான் சட்டப்படி சந்திப்பேன். வேட்டுவம் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தின் துயரத்தில் இருந்தே, நான் இன்னும் மீளமுடியாமல் இருக்கிறேன். இலக்கியா தற்கொலை முடிவுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
திலீப் சுப்பராயன்: முன்னணி ஸ்டண்ட் மாஸ்டரான சூப்பர் சுப்பராயனின் மகனான திலீப் சுப்பராயன். தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராக இருக்கிறார். இவர் அரிமா நம்பி, புலி, நானும் ரௌடி தான்,தெறி, சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ஜில்லா, கோட், தீரன் அதிகாரம் ஒன்னு, வடசென்னை உள்ளிட்ட பல படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.


Click it and Unblock the Notifications











