Dhillukku Dhuddu 2 Box Office Collection: உண்மையிலேயே சந்தானத்தோட தில்லுக்கு 'துட்டு' தான்!

சந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு 2 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

கலெக்ஸனை அள்ளிய சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2- வீடியோ

சென்னை: சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 திரைப்படம் கடந்த ஏழு நாட்களில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.

சந்தானம் நடிப்பில் ராம்பாலா இயக்கிய படம் தில்லுக்கு துட்டு 2. கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று இப்படம் திரைக்கு வந்தது.

சந்தானத்தின் வழக்கமான காமெடியுடன், மொட்டை ராஜேந்திரன், ஊர்வசியும் சேர்ந்து செய்யும் அலப்பறைகள் படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. இதனால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வழக்கமாக பேய் படங்களுக்கு என்று ஓரு குறைந்தபட்ச உத்தரவாதம் இருக்கும். அதிலும், காமெடியுடன் கூடிய பேய் படம் என்பதால் தில்லுக்கு துட்டு 2 படத்தின் வசூல் நன்றாகவே உள்ளது.

தியேட்டர்கள் அதிகரிப்பு

தியேட்டர்கள் அதிகரிப்பு

தில்லுக்கு துட்டு 2 படம் தமிழ்நாடு முழுவதும் முதலில் 300க்கும் அதிகமான திரைகளில் வெளியிடப்பட்டது. படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் படத்தின் வசூலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் கூட்டம்

மக்கள் கூட்டம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர்,"தில்லுக்கு துட்டு 2 படம் திரையரங்குகளில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த 7ம் தேதி படம் வெளியானதில் இருந்தே, தியேட்டர்களில் மக்கள் கூட்டம் நன்றாக இருக்கிறது.

ரூ.10 கோடி வசூல்

ரூ.10 கோடி வசூல்

இதனால் தமிழ்நாடு முழுவதும் கடந்த ஏழு நாட்களில் இப்படம் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. சரியான தொகை குறித்த விவரம் இன்னும் வரவில்லை. ஆனால் படம் நல்ல வசூலை பெற்று வருவது மட்டும் நிச்சயம்", என்றார்.

சந்தானம் தயாரிப்பு

சந்தானம் தயாரிப்பு

தில்லுக்கு துட்டு 2 படத்தை நடிகர் சந்தானம் தனது ஹேண்ட்மேட் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருந்தார். இப்படத்தினை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிட்டார். விநியோக உரிமை, தொலைக்காட்சி சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை என படம் நன்றாகவே வியாபாரம் ஆகியிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே சந்தானம் மீண்டு வருவதற்கான நல்ல வாய்ப்பை தில்லுக்கு துட்டு 2 ஏற்படுத்தியுள்ளது.

இந்த வாரம் எப்டி இருக்கும்?

இந்த வாரம் எப்டி இருக்கும்?

இந்த வாரம் காதலர் தினத்தை முன்னிட்டு கார்த்தி நடித்துள்ள தேவ், விதார்த் நடித்துள்ள சித்திரம் பேசுதடி 2, ப்ரியா பிரகாஷ் வாரியரின் ஒரு அடார் காதல் ஆகிய படங்கள் வெளியாகின்றன. மேலும், அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் 6வது வாரத்தில் நுழைகிறது. அதுவும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 130 திரைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் தில்லுக்கு துட்டு 2 படத்தின் அடுத்த வார வசூல் எப்படி இருக்கும் என்பதை தற்போதைக்கு கணிக்க முடியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X