»   »  சிம்புவால் இழந்ததை சந்தானத்தால் பிடித்து விடுமா தேனாண்டாள்?

சிம்புவால் இழந்ததை சந்தானத்தால் பிடித்து விடுமா தேனாண்டாள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் ரொம்ப்ப்ப்ப்பவே ஸேஃபாக பயணிக்கும் தயாரிப்பு நிறுவனம் தேனாண்டாள் பிலிம்ஸ்தான்.

ஒரு படத்தை கையில் எடுப்பதற்கு முன்பு ஆயிரம் தடவை யோசித்துதான் எடுப்பார்கள். அதுவும் மினிமம் கேரண்டி படங்கள் என்றாலே இவர்களுக்கு அல்வா போல... ஆனால் சமீபத்தில் அவர்களையே ஆட்டிப் பார்த்தது சினிமா.


Dhillukku Thuttu is a safe bet for Thenandal

அனுஷ்காவை வைத்து மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட ருத்ரமா தேவி எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. சிம்பு, நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு படத்துக்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பைப் பார்த்து அந்த படத்தை வாங்கி வெளியிட்டது. ஆனால் அந்த படத்தால் சுமார் ஒன்பது கோடி வரை இழப்பு ஆகிவிட்டது தேனாண்டாளுக்கு.


இந்நிலையில் இன்று வெளியான சந்தானத்தின் தில்லுக்கு துட்டு படத்தின் புரமோஷனில் தேனாண்டாள் நிறுவனம் பெரிய ஆர்வம் காட்டவில்லை. சந்தானமே தனது சொந்தக்காசை போட்டுத்தான் புரமோஷன் செய்திருக்கிறார். இன்று பிரபல வார இதழில் வெளியான அட்டைப்படப் பேட்டிக்கு மட்டுமே சில லட்சங்கள் ஆகியிருக்கும்.


ஆனால் தில்லுக்கு துட்டு படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. நன்றாக சிரிக்கும் அளவுக்கு காமெடி படமாக ரசிக்கும் வகையில் உள்ளது. இதனால் சிம்பு படத்தில் இழந்ததை சந்தானம் படத்தில் எடுத்துவிடுவார்கள் தேனாண்டாள் நிறுவனத்தினர் என்கிறார்கள்.


சிம்புவால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் சந்தானம். தனுஷுக்கு ஒரு சிவகார்த்திகேயன். சிம்புவுக்கு ஒரு சந்தானம்!

English summary
It seems like Thenandal Films is safely reaching the bank with its successful release of Santhanam's Dhillukku Thuttu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil