ஒரே நாளில் வெளியான 4 படங்கள்.. செம போட்டி.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Recommended Video

Today Releasing Tamil movies | Gundu | Iruttu | Dhanusu Raasi Neyargalae | Jada

சென்னை: தமிழ் சினிமாவில் நேற்று நான்கு படங்கள் ரிலீஸான நிலையில் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளிக்கிழமையான நேற்று கோலிவுட்டில் குண்டு, இருட்டு, தனுசு ராசி நேயர்களே, ஜடா ஆகிய 4 படங்கள் ரிலீஸாயின. இதில் குண்டு மற்றும் இருட்டு ஆகிய படங்கள் எடுத்த எடுப்பிலேயே பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

அதற்கு அடுத்தப்படியாக தனுசு ராசி நேயர்களே படமும் அதனை தொடர்ந்து ஜடா படமும் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் டாப்

பாக்ஸ் ஆபிஸில் டாப்

அதன்படி, பா.ரஞ்சித் தயாரிப்பில் ஆதியன் ஆதிரை இயக்கத்தில், அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் டாப்பில் உள்ளது. அதாவது அந்த படத்தின் முதல் நாள் வசூல் 13 லட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது.

இரண்டாமிடம்

இரண்டாமிடம்

இதேபோல் சுந்தர் சி நடிப்பில் துரை இயக்கத்தில் வெளியான இருட்டு திரைப்படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. வித்தியாசமான பேய் படமாக உருவாகியுள்ள இப்படம், சென்னையில் முதல் நாளில் 11 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறது.

மூன்றாவது இடம்

மூன்றாவது இடம்

அதற்கு அடுத்த படியாக தனுசு ராசி நேயர்களே. சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதாவது தனுசு ராசி நேயர்களே படம் 10 லட்சம் ரூபாய் வசூலித்திருப்பதாக தெரிகிறது.

கடைசி இடம்

கடைசி இடம்

கடைசியாக ஜடா பிகில் படத்தை தொடர்ந்து கதிர் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநரான குமரன் இயக்கியிருக்கிறார். இப்படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் 6 லட்சம் ரூபாய் வசூலித்து கடைசி இடத்தை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X