Dhivyadharshini: மூக்குத்தி அம்மனாக மாறிய டிடி... நயன்தாராவிற்கே டஃப் கொடுப்பாங்க போல!
சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளனியாக தனது பயணத்தை தொடங்கிய டிடி, அந்த தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்தி வழங்கியும், , பிரபலங்களை பேட்டி எடுத்தும் பிரபலமானார். அவரின் வசீகரமான பேச்சும், சுறுசுறுப்புத்தனத்திற்கும் என்று தனி ரசிகர்கள், இருக்கும் நிலையில், பச்சைப் புடவையில் நகைகள் அனைத்தையும் போட்டு வித்தியாசமான கெட்டப்பில் போஸ் கொடுத்திருந்தார். இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது

தமிழ் சினிமா தொடங்கி, பாலிவுட் சினிமா வரை அனைவருக்கும் பிடித்தமான தொகுப்பாளினியாகவே இருக்கிறார் டிடி, கலகலப்பாக பேசி அனைவர் மனதிலும், இடம்பிடித்த டிடி, கால் வலிக்காக சிகிச்சை செய்ய அது தவறாகி போக, கடந்த 10 ஆண்டுகளாக கால் வலியுடன் போராடி வந்தார். அண்மையில் டிடி இதற்காக மீண்டும் , அறுவை சிகிச்சை செய்து அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். அந்த போட்டோக்களை இணையத்திலும் அவர் பதிவிட அவரது ரசிகர்கள் பரிதவித்துப் போய் அவர் விரைவில் நலம் வெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தனர்.

மூக்குத்தி அம்மனாக மாறிய டிடி: இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் டிடி, தற்போது பச்சை நிற புடவையில் மிகப்பெரிய பெரிய , ஆபரணங்கள் அணிந்து, பெரிய பொட்டு வைத்து அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார், இந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள், லைக்குகளை குவித்து வருகின்றனர். நேத்து, மூக்குத்தியம்மன் 2 படத்தின் பூஜை நடைபெற்றது, அந்த நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கியிருந்தார். அப்போது அதே கெட்டப்பிலேயே, தனது instagram பக்கத்தில் போட்டோக்களை வைத்துள்ளார், இந்த போட்டோக்களை பார்த்த இணையவாசிகள் நயன்தாராவிற்கே டஃப் கொடுப்பீங்க போல என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கஸாண்ட்ரா, அபிநயா,யோகி பாபு ஆகியோர் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் உடன் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சிமேக்ஸ், ஐ.வி. ஓய் என்டர்டெய்மென்ட் மற்றும் பி ஃபோர் யூ மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் மூக்குத்தி அம்மன் -2 பாகம். இதில் நயன்தாரா நடிக்கிறார். மார்ச்-15ம் தேதி முதல் ஹூட்டிங் தொடங்குகிறது



Click it and Unblock the Notifications











