கௌதம் மேனன் வேற லேவல்.. “துருவநட்சத்திரம்“.. டிடியின் பளிச் பதில் !
சென்னை : இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்தார் விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.
Recommended Video
நடிகை மற்றும் தொகுப்பாளியான டிடி என்கிற திவ்யதர்ஷினியை தெரியாத ரசிகர்களே இருக்க முடியாது .விஜய் தொலைக்காட்சியின் மிக முக்கியமான தொகுப்பாளர் என்றால் அது திவ்யதர்ஷினி தான். இவர் ஆரம்பகால கட்டத்தில் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். பின்னர் சிறிய இடைவெளி விட்டு பவர் பாண்டி மற்றும் சர்வம் தாள மயம் ஆகிய படங்களில் நடித்து இருந்தார் .

தற்போது இன்ஸ்டாகிராமில் திவ்யதர்ஷினி தனது ரசிகர்கள் கேட்டுகும் அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் அளித்து இருக்கிறார் . இதில் பலரும் திவ்யதர்ஷினியை என்னை காதலியுங்கள், திருமணம் செய்யுங்கள் என்ற கேட்டிருந்தனர் அதற்கும் சிரித்து கொண்டு அழகாக பதில் கூறினார் திவ்யதர்ஷினி .
திவ்யதர்ஷினிக்கு திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து நடந்து விட்டது. இதை பற்றி ரசிகர்கள் கேட்ட போது சற்று சோகமான டிடி, ஒருவரின் பிரிவில் இருந்து வெளியே வருவது கடினமான விசயம் தான் என கூறினார்.

மேலும் நான் அம்மாவிடம் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்துள்ளேன் இதனால் நான் கட்டாயம் மது அருந்தமாட்டேன் என்று ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கிறார் மேலும் புகைபிடிக்கும் பழக்கம் எனக்கு அடிப்படையில் கிடையாது என்றும் கூறியுள்ளார் .
தல, தளபதி பற்றி ரசிகர்கள் கேட்ட போது எனக்கு அஜித் மற்றும் விஜய் இருவரையும் மிகவும் பிடிக்கும் சமீபத்தில் வெளியான குட்டி ஸ்டோரி பாடல் என் மனம் கவர்ந்த பாடல் என்றும் தலயின் நேர்கொண்ட பார்வை படம் அவ்வளவு பிடிக்கும் என்று பதிலளித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் டிடிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யபட்டது. இதை பற்றி ரசிகர்கள் கேட்டபோது இப்போது நான் ஓய்வில் இருப்பதால் வேகமாக குணமாகி வருகிறேன் என்றும் கூறியிருக்கிறார் .
டிடி தற்போது விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பற்றி தெரிவித்த டிடி விக்ரம் சார் மிகவும் உயர்ந்தவர் மற்றும் படத்தில் சிம்ரன் மற்றும் பல நடிகர்களுடன் நடித்தது நல்ல அனுபவம் என்றும் கூறினார் மேலும் கௌதம் மேனன் எல்லாத்துக்கும் மேல் வேற லெவல் என கூறினார்.


Click it and Unblock the Notifications











