அந்த காலை வச்சுக்கிட்டு..ஏ.ஆர்.ரகுமான் பாடலுக்கு அப்படி ஆடிய நம்ம டிடி.. சரமாரி வாழ்த்தும் ஃபேன்ஸ்!
சென்னை: ராம்ஜானை முன்னிட்டு டிவி தொகுப்பாளினியும் நடிகையுமான டிடி, வெளியிட்டுள்ள நடன வீடியோவை பலர் பாராட்டியுள்ளனர்.
Recommended Video
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி, திவ்யதர்ஷினி. டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.
காபி வித் டிடி, ஜோடி நம்பர் 1, அன்புடன் டிடி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்திய அவர் சினிமாவிலும் நடித்து வருகிறார்.

துருவ நட்சத்திரம்
விசில், சரோஜா, கோவா, பவர்பாண்டி, சர்வம் தாள மயம் உட்பட சில படங்களில் நடித்துள்ள அவர், அடுத்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார். இவர் தனது நீண்ட நாள் நண்பர் ஶ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

எலும்பு முறிவு
விவாகரத்துக்கு பின்பும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்தார் டிடி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், லாக்டவுன் காலத்தில் அதிகம் தலைகாட்டாமல் இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், அவரது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காலின் காயத்துக்கு கட்டுப்போட்டபடி, ஒரு போட்டோவை பதிவிட்டிருந்தார், டிடி,

மீண்டு வருவேன்
அதில், ஊரடங்குக்குப் பிறகு இந்த விபத்து ஏற்பட்டது. என் இடது முட்டியில் முறிவு ஏற்பட்டது. கடும் வலி இருந்ததால், எழுதுவது, பிடித்த படங்களை ஆன்லைனில் பார்ப்பது, உள்ளிட்ட விஷயங்களில் என் மனதை செலுத்த முயற்சி செய்து வந்தேன். நிச்சயம் விரைவில் இதிலிருந்து மீண்டு வருவேன் என்று கூறியிருந்தார்.
View this post on InstagramA post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on
ரம்ஜான் வாழ்த்து
இந்நிலையில், ரம்ஜானை முன்னிட்டு, இஸ்லாமிய நண்பர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் டி.டி. அதில், 'ஜோதா அக்தர்' இந்திப் படத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான பாடலுக்கு தரையில் அமர்ந்தபடி நடனம் ஆடியுள்ளார். இது மனசுக்குப் பிடித்த பாடல் என்று கூறியுள்ள அவர், மற்றொரு வீடியோவில் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஆறடி தூரத்தில்
கூடவே, பிரண்ட்ஸ் அப்படியே பிரியாணி அனுப்பிக் கொடுங்க. ஆறடி தூரத்துல நின்னு வாங்கிக்கறேன் என்று ஜாலியாகக் கூறியுள்ளார். தனது காலில் போடப்பட்டிருந்த கட்டை நேற்றுதான் பிரித்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

வெஜிடேரியன்னு
சிலர், 'ஐயோ அந்த காலோட ஏன் இப்படி? என்றும் 'காலை பத்திரமா பாத்துக்கோங்க' என்றும் கூறியுள்ளனர். பிரியாணி கொடுக்க நாங்க ரெடி, நீங்க வெஜிடேரியன்னு நினைச்சேன் என்று ஒருவர் தெரிவித்துள்ளார். இன்னும் சிலர் சிறப்பான பெர்பாமன்ஸ் என்று வாழ்த்தியுள்ளனர். ஒருவர், முழுசா சந்திரமுகியா மாறிய டிடியை பார்' என்று கலாய்த்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











