Dhoni - எல்ஜிஎம்மில் அப்படியொரு சர்ப்ரைஸ் இருக்குமா?.. ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு
சென்னை: Dhoni (தோனி) லெட்ஸ் கெட் மேரிட் படத்தில் ஒரு சர்ப்ரைஸ் நடக்குமா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனிக்கு தமிழ்நாட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அவரும் தமிழ்நாடு தனக்கு இரண்டாம் தாய் வீடு என பலமுறை கூறியிருக்கிறார். இந்தச் சூழலில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இதனால் தோனி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம்: தோனி படம் தயாரிக்கப்போகிறார் என தெரியவந்ததும் அவர் எந்தப் படத்தை முதலில் தயாரிக்கவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தமிழ்நாடு மீது தனக்கு இருக்கும் அன்பை உறுப்படுத்தும் விதமாக முதல் படத்தை தமிழில் தயாரிக்கிறார். தோனி என்ட்டெர்டெயின்மென்ட் தயாரிக்கும் தமிழ் படத்துக்கு லெட்ஸ் கெட் மேரிட் (LGM) என்று பெயரிடப்பட்டுள்ளது.
படத்தில் யார் யார்?: தோனி தயாரிக்கும் லெட்ஸ் கெட் மேரிட் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். லவ் டுடே படத்தில் நடித்து 2கே கிட்ஸ்களின் பேவரைட்டாக இருக்கும் இவானா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, நதியாஉள்ளிட்டோரும் நடிக்கின்றனர். குடும்பத்தோடு பார்க்கும் பொழுதுபோக்கு படமாக தயாராகி இருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது.. ரமேஷ் தமிழ்மணி என்ற இயக்குநர் படத்தை இயக்க அவரே படத்துக்கு இசையும் அமைத்திருக்கிறார்.
சூப்பராக நடந்த ஆடியோ வெளியீட்டு விழா: இந்தச் சூழலில் சில வாரங்களுக்கு முன்னதாக லெட்ஸ் கெட் மேரிட் திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் தோனி அவரது மனைவி சாக்ஷி உள்ளிட்டோரும் படக்குழுவினரும் கலந்துகொண்டனர். தோனி ஆடியோவை வெளியிட்டார். மேலும் அந்த விழாவில் யோகிபாபுவுடன் தோனி கேக் சாப்பிடும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது.
கெஸ்ட் ரோலில் தோனி?: இந்நிலையில் லெட்ஸ் கெட் மேரிட் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தில் தல தோனி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இது உண்மையில்லை. தோனி தயாரிப்போடு மட்டும் நிறுத்திக்கொள்வார். அவர் நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.
முன்னதாக ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தோனி, "அம்பத்தி ராயுடு ரிட்டையர்ட் ஆகிவிட்டதால் சென்னை அணி நிர்வாகத்திடம் பேசி யோகிபாபுவை அணியில் விளையாட செய்கிறேன். ஆனால் என்ன பந்தெல்லாம் பயங்கர வேகமாக வரும்" என ஜாலியாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தோனி கையெழுத்து போட்ட பேட் கிடைக்கும் என்பதாலேயே இந்தப் படத்தில் யோகிபாபு நடிக்க ஒத்துக்கொண்டார் என்ற தகவலும் வெளியானது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











