மோகன்லால் முதல் கார்த்திக் சுப்புராஜ் வரை.. ஓய்வு பெற்ற ‘தல’ தோனி & ரெய்னாவுக்கு ராயல் ஃபேர்வெல்!

சென்னை: 'தல' தோனி என ரசிகர்கள் மட்டுமல்ல பல பிரபலங்களும் அழைக்கும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் தோனி, இன்று திடீரென தனது ஓய்வை அறிவித்தார்.

Recommended Video

Dhoni Retirement: கண்கலங்கிய ரசிகர்கள்

சமீபத்தில் சென்னைக்கு வந்து ஐபிஎல் போட்டிக்காக தயாராகி வரும் மகேந்திர சிங் தோனி, சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக சுதந்திர தினமான இன்று அறிவித்த நிலையில், உடனடியாக ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இரு பெரும் கிரிக்கெட் ஜாம்பவான்களின் ஓய்வை அறிந்த சினிமா பிரபலங்கள், அவர்களுக்கு ராயல் ஃபேர்வெல் சொல்லி வருகின்றனர்.

இதுதான் முக்கியம்.. கிரிக்கெட் உலகமே ஷாக்கில் தவிக்க.. தோனியை பாருங்க என்ன பண்ணிட்டு இருக்காருன்னு!?

ஃபேர்வெல் கேப்டன்

ஃபேர்வெல் கேப்டன்

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால், தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியின் அறிவிப்பு குறித்து பதிவிட்டுள்ளார். "ஃபேர்வெல் கேப்டன் எம்.எஸ். தோனி, உங்களின் எதிர்கால திட்டங்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். மோகன்லாலின் ரசிகர்களும் தோனிக்கு ராயல் ஃபேர்வெல் சொல்லி வருகின்றனர்.

ரெய்னாவுக்கும்

ரெய்னாவுக்கும்

தோனியின் நம்பிக்கை நட்சத்திரமான சுரேஷ் ரெய்னாவும், தோனியின் அறிவிப்பைத் தொடர்ந்து, தானும் அவரது வழியில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தோனியும், ரெய்னாவும் இணைந்து இருக்கும் மற்றொரு புகைப்படத்தை ஷேர் செய்து Farewell என மோகன்லால் பதிவிட்டுள்ளார்.

சிஎஸ்கேவில் சந்திப்போம்

சிஎஸ்கேவில் சந்திப்போம்

இந்த ஆண்டில் இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுது.. ஏற்கனவே இதயம் நொறுங்கி விட்டது. சரியான நேரத்தை தான் நீங்க உங்க ஓய்வை அறிவிக்க தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் என தோனிக்கும் ரெய்னாவுக்கும் பதிவு போட்டுள்ள ஆடை பட இயக்குநர் ரத்னகுமார், இருவரையும் சிஎஸ்கே அணி விளையாடும் ஐபிஎல் போட்டிகளில் சந்திப்போம் என பதிவிட்டுள்ளார்.

கேப்டன் கூல்

கேப்டன் கூல்

பொதுவா தோனி போல நானும் காமுமா என சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் செல்லம்மா பாடலில் வரிகள் இருக்கும். கேப்டன் கூல் என அனைவராலும் போற்றப்பட்ட வந்த தோனியை, சென்னை ரசிகர்கள் தல தோனி என்றே அழைத்து வந்தனர். இந்நிலையில், தற்போது நடிகை ஆத்மிகா, தனது ட்விட்டர் பக்கத்தில் கேப்டன் கூல் ஃபார் லைஃப் மற்றும் தல ஃபார் எ ரீசன் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

தவறிட்டோம்

தவறிட்டோம்

தோனியின் தீவிர ரசிகரான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ரசிகர்கள் ஆகிய நாங்கள், பெரிய ஸ்டேடியத்தில், சூப்பரான மேட்ச் முடிந்த பின்னர், உங்களுடைய இந்த அறிவிப்பை கேட்டு, உங்களுக்கு பிரியா விடை கொடுக்கும் தருணத்தை தவற விட்டுட்டோம். சென்னை அணிக்காக மீண்டும் களமிறங்கி நீங்கள் ஆடும் ஆட்டத்தை காண காத்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

நம்பர் 7

நம்பர் 7

'தல' தோனியின் ஜெர்ஸி நம்பர் '7' எந்த ஒரு ரசிகனாலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. Greatest of all time #7 என ராக்ஸ்டார் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தோனிக்கு பிரியா விடை கொடுத்துள்ளார். சமீபத்தில் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு சூப்பர்ஸ்டார் ஸ்டைலில் தோனிக்கு வீடியோ ஒன்றை அனிருத் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. பல பிரபலங்கள் தோனிக்கும், ரெய்னாவுக்கும் தங்கள் வாழ்த்துக்களையும் உணர்வுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X