பாகுபலி தோனி.. கடைசி வரைக்கும் போராட்டம்.. தோனியை அப்படி பார்க்க முடியல.. புலம்பும் பிரபலங்கள்!

சென்னை: நேற்றைய ஐபிஎல் போட்டியை சென்னை அணி தோற்றதுக்கு கூட யாரும் வருத்தப்படவில்லை. ஆனால், தல தோனி கடைசி ஓவர்களில் சிரமப்பட்ட அந்த காட்சிகளை பற்றி ஏகப்பட்ட பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

39 வயதாகும் எம்.எஸ். தோனி கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

இந்த ஐபிஎல் போட்டியில் தோனி தனது கேப்டன்ஸியால் எப்படியாவது சென்னை அணிக்கு கப் வாங்கித் தருவார் என்ற நம்பிக்கை இன்னமும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

ஆரம்ப வீரர்கள் சொதப்பல்

ஆரம்ப வீரர்கள் சொதப்பல்

மற்ற அணிகளை கம்பேர் பண்ணும் போது சென்னை அணியின் துவக்க வீரர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து ஆட மறுக்கின்றனர். அதே போல தொடர்ந்து சொற்ப ரன்களுக்கு அதிக பந்துகளை வீணடித்து விட்டு ஒருவர் பின் ஒருவர் அவுட்டானது தான் நேற்றைய தோல்விக்கு மிகப்பெரிய காரணம் என்று சொல்ல வேண்டும்.

டிரெண்டாகும் தோனி

டிரெண்டாகும் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச் தோற்றதைக் கூட யாரும் தற்போது பெரிதாக கண்டுகொள்ளவில்லை. கடைசி வரை சிங்கம் போல போராடி எதிரிகளுக்கு பயம் கொடுத்த தோனி, இறுதி ஓவரில் சிக்ஸர் அடிக்க முடியாமல் இரண்டு, இரண்டு ரன்களாக மூச்சுவாங்க ஓடி, ஒரு கட்டத்தில் முடியாமல் நின்றதை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அதைப் பற்றிய ட்வீட்களுடன் #Dhoni உள்ளிட்ட பல ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தோற்றால் தோனி போல தோற்கணும்

தோற்றால் தோனி போல தோற்கணும்

நடிகை கஸ்தூரி ஒரு தீவிர கிரிக்கெட் பிரியை என்பது தெரிந்த விஷயம் தான். நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டியை பார்த்த அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், தோற்றால் தோனி மற்றும் சாம் கர்ரன் போல கடைசி வரைக்கும் போராடி தோற்கணும் என பதிவிட்டுள்ளார். அவரது ட்வீட்டை பல ரசிகர்களும் பாராட்டி உள்ளனர்.

பாகுபலி தோனி

பாகுபலி தோனி

வெற்றி, தோல்வி என்பதெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது. கடைசி வரைக்கும் தனது அணியை ஜெயிக்க தோனி போராடிய போராட்டம் தான் முக்கியம். பாகுபலியை போல போராடி வீழ்ந்த தோனியின் ரசிகர்களாக நாங்கள் எப்போதுமே இருப்போம் என தோனியின் புகழை பல பிரபலங்களும் துதி பாடி வருகின்றனர்.

கேம் இன்னும் முடியல

கேம் இன்னும் முடியல

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் தல தோனியின் தீவிரமான ரசிகையான நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமாரும், தோனி மூச்சுத் திணறி, கடைசி ஓவரில் தவித்து நின்ற காட்சிகளை ஷேர் செய்து, எப்போதுமே நாங்க உங்க பக்கம் தான் தோனி.. கேம் இன்னும் முடியல, அவர் எப்ப வேண்டுமானாலும் ஆட்டத்தை மாற்றுவார்.. ஃபைனலுக்கு நாங்க போவோம் என கெத்தாக ட்வீட் போட்டுள்ளார்.

தல நீ கஷ்டப்படாத

தல நீ கஷ்டப்படாத

நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமாரின் ட்வீட்டுக்கு கீழே, பிகில் படத்தில் ராயப்பன் குத்துப்பட்டு வீழ்ந்து கிடக்கும் காட்சியை பகிர்ந்து, ரசிகர்கள் தல நீ கஷ்டப்படாத.. உன்னை இப்படி பார்க்க முடியல.. அடுத்த மேட்ச்ல பார்த்துக்கலாம் என கண்ணீர் விட்டு கதறி போஸ்ட்டுகளை தோனிக்காக பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X