ஹரிஷ் கல்யாண், இவானா, யோகிபாபு கூட்டணியில் Lets Get Married... தோனி படத்தின் இன்ட்ரோ டீசர் ரிலீஸ்
சென்னை: முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், அதிரடி வீரருமான தோனி திரைப்படங்கள் தயாரிப்பில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தார்.
தோனி தயாரிக்கும் முதல் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குவது மட்டுமே உறுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்காக ரமேஷ் தமிழ்மணி இயக்கும் படத்தின் டைட்டில், ஹீரோ, ஹீரோயின் குறித்து அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த அப்டேட்டின் படி ஹரிஷ் கல்யாண், இவானா, யோகிபாபு ஆகியோருடன் நதியாவும் நடிக்கவுள்ளார்.

சினிமா தயாரிப்பில் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், அதிரடி ஆட்டக்காரர் என கொண்டாடப்பட்ட தோனி, ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். கூல் கேப்டன், தல என தமிழ்நாட்டு ரசிகர்கள் அவரை அழைப்பதும் உண்டு. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற தோனி, தமிழில் படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை தொடங்கிய அவர், முதல் படம் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.

Lets Get Married
'அதர்வா தி ஆர்ஜின்' என்ற அனிமேஷன் படம் மூலம் கவனம் ஈர்த்த ரமேஷ் தமிழ்மணி தோனி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் முதல் படத்தை இயக்கவுள்ளார். Lets Get Married என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம், ஃபேமிலி என்டர்டெயினர். ஜானரில் ஃபீல் குட் மூவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. Lets Get Married என்ற படத்தின் டைட்டிலுடன், இதில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.

ஹீரோவாகும் ஹரிஷ் கல்யாண்
அதன்படி தோனியின் முதல் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக இவானாவும், நதியா, யோகி பாபு ஆகியோர் முக்கியமான கேரக்டரிலும் நடிக்கவுள்ளனர். லவ் டுடே திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இவனாவுக்கு இது மிகப் பெரிய ஜாக்பாட் என்றே சொல்லப்படுகிறது. அதேபோல் நதியா, யோகி பாபு ஆகியோர் நடிக்கவுள்ளதும் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு ஆகியோருக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வெளியானது இன்ட்ரோ டீசர்
Lets Get Married படத்தின் டைட்டில் அறிவிப்பை மினி டீசருடன் வெளியிட்டுள்ளது படக்குழு. 8 வடிவ சாலையில் ஒரு சின்ன வாகனம் செல்வதை போல உருவாகியுள்ள இந்த டீசர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள Lets Get Married திரைப்படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் குறித்த மேலும் சில அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











