வதந்திகளை நம்பாதீங்க... என்ன தோனி இப்படி சொல்லிட்டாரு!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியை தன்னுடைய கூல் செயல்பாடுகளால் சிறப்பாக்கியவர் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக மீண்டும் பதவியேற்றுள்ளார்.

ரசிகர்களை கவரும் சினிமா, விளையாட்டு

ரசிகர்களை கவரும் சினிமா, விளையாட்டு

சினிமா, விளையாட்டு இந்த இரண்டும் ரசிகர்களை எப்போதுமே கட்டுப் போட்டு வருபவை. இதில் சினிமாவில் ஏராளமான நடிகர், நடிகைகள் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், இந்திய அளவில் கிரிக்கெட்டை கனவாக கொண்டு பல ரசிகர்கள் தொடர்ந்து தங்களது பேவரிட் ஆட்டக்காரர்களை பாலோ செய்து வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த தோனி

ரசிகர்களை கவர்ந்த தோனி

அந்த வகையில் சச்சினுக்கு அடுத்தபடியாக இந்திய கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமான ஆட்டக்காரராக ரசிகர்களை கவர்ந்தவர் எம்எஸ் தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை இவர் ராஜினாமா செய்த நிலையில், தற்போது சிஎஸ்கேவின் கேப்டனாக தொடர்ந்து வலம்வந்துக் கொண்டிருக்கிறார்.

கேப்டன் கூல் தோனி

கேப்டன் கூல் தோனி

அந்த வகையில் கேப்டன் கூல் மற்றும் தல என்று ரசிகர்களால் தொடர்ந்து பாராட்டப்படும் தோனி, சிஎஸ்கேவிலிருந்தும் சில ஆண்டுகளில் ஓய்வு பெற்றுவிடுவார் என்று நம்பப்படும் நிலையில், தற்போது தோனி என்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தோனி விளக்கம்

தோனி விளக்கம்

சூப்பர்ஸ்டாரிடம் உதவியாளராக பணிபுரிந்த சஞ்சய் என்பவர்மூலம் இந்த தயாப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருவதாகவும், அடுத்தடுத்து படங்களை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. தமிழில் நயன்தாராவை வைத்து புதிய படத்தை தயாரிக்க தோனி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

தோனி என்டர்டெயின்மெண்ட் விளக்கம்

தோனி என்டர்டெயின்மெண்ட் விளக்கம்

இந்நிலையில், இந்த தகவலை தோனி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்த ட்விட்டர் பக்கத்தில் தோனி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பகிர்ந்துள்ள தகவலில் தங்களது நிறுவனத்தில் சஞ்சய் என்ற பெயரில் யாரும் வேலை செய்யவில்லை என்றும் இதுபோன்ற போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

விரைவில் தகவல்

விரைவில் தகவல்

தோனி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் பல திட்டங்களை தாங்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வோம் என்றும் விளக்கமளித்துள்ளது. ஆனால் பல பிராஜக்ட்களை ஏற்கனவே துவங்கியுள்ளதாகவும் தோனி என்டர்டெயின்மெண்ட் கூறியுள்ளது.

போலியான தகவல்கள்

போலியான தகவல்கள்

நயன்தாராவை வைத்து புதிய படத்தை தயாரிக்கவுள்ளதாக பரவிய தகவல்கள் போலியானவை என்பது இதன்மூலம் தெரியவருகிறது. ஆனால் பல பிராஜக்ட்களை துவக்கியுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், விரைவில் தோனியின் இந்த தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களுக்கு சிறப்பான பல சர்ப்ரைஸ்களை அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X