'தல' பஞ்சாயத்தில் தானாக வந்து தலையை கொடுத்த கிரிக்கெட் வீரர்
சென்னை: தோனி தல கிடையாது எப்பவும் ஒரே தல தான் அது அஜித் என்கிறார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் கேப்டன் தோனியை தல என்று அன்புடன் அழைக்கிறார்கள். தற்போது ஐபிஎல் போட்டிகள் நடந்து வருவதால் அவரை பற்றி ட்வீட்டும் போது எல்லாம் தல தோனி என்று குறிப்பிடுகிறார்கள்.
ஸ்டேடியத்தில் கூட தல தோனி என்று எழுதிய பதாகைகளை காட்டுகிறார்கள்.

யாரு தல?
அது எப்படி தோனியை தல என்று அழைக்கலாம். தல என்றால் எங்கள் அஜித் மட்டுமே என்று அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

ரசிகர்கள்
தல என்ற வார்த்தையை அஜித்துக்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதா, போவீங்களா என்று லீடரின் ரசிகர்கள் கூறினார்கள். அதை பார்த்த தலைவரின் ஆதரவாளர்களோ தலயை பற்றி குறை கூறுகிறீர்களே உங்களின் ஆள் எங்கள் அண்ணனின் பட்டத்தை சுட்டுவிட்டாரே, நாங்கள் ஏதாவது கூறினோமா என்றார்கள்.

தோனி
ட்விட்டரில் தல பஞ்சாயத்து பெரும் பஞ்சாயத்தாக உள்ளது. நீங்கள் என்னை தல என்று தான் அழைக்க வேண்டும் என்று அஜித்தோ, தோனியோ ரசிகர்களிடம் ஒருபோதும் கூறியது இல்லை.
ஸ்ரீசாந்த்
தல பஞ்சாயத்து போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் தோனி தல அல்ல எப்பவும் ஒரே தல அது அஜித் அண்ணா தான் என்கிறார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். அவர் அஜித்தை பற்றி பேசிய வீடியோவை தல ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











