நாளைய போட்டிக்கு முன்பு சூப்பர் ஸ்டார் படம் பார்த்த தோனி, பாண்டியா, ஜாதவ், ராகுல்

By Siva

மும்பை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியினர் லண்டனில் பாரத் படம் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்தியா இதுவரை தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.

போட்டிக்கு முன்பு இந்திய அணி வீரர்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் கடந்த 5ம் தேதி வெளியான பாரத் படத்தை நாட்டிங்ஹாமில் உள்ள தியேட்டர் ஒன்றில் பார்த்து ரசித்துள்ளனர்.

கேதர் ஜாதவ்

பாரத் படம் பார்த்த பிறகு அணியினருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் கேதர் ஜாதவ். அந்த புகைப்படத்தில் தோனி, ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல், கையில் கட்டுடன் ஷிகர் தவான் உள்ளிட்டோர் உள்ளனர். ஷிகர் தவானுக்கு கையில் காயம் ஏற்பட்டதால் அவரால் 2 வாரங்களுக்கு விளையாட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் அணி வீரர்களுடன் சேர்ந்து படம் பார்க்க சென்றுள்ளார்.

சல்மான் கான்

கேதர் ஜாதவ் போட்ட ட்வீட்டை பார்த்த சல்மான் கான் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, இங்கிலாந்தில் பாரத் படத்தை பார்த்த பாரத அணிக்கு நன்றி... எதிர்வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள்.. ஒட்டுமொத்த பாரதமும் உங்கள் பக்கம்... பாரதம் வெல்லட்டும் என்று தெரிவித்துள்ளார்.

வசூல்

வசூல்

சல்மான் கானுக்கு ரம்ஜான் பண்டிகை என்றாலே ராசி தான். ரம்ஜான் பண்டிகை அன்று ரிலீஸான பாரத் படம் மூன்றே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்தது. மேலும் வெளியான ஐந்தே நாட்களில் ரூ. 150 கோடி வசூல் செய்த பாரத் தற்போது ரூ. 200 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தன் படத்திற்கு அமோக ஆதரவு தெரிவித்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சல்மான் கான்.

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப்

பாரத் படத்தில் சல்மான் கான் ஜோடியாக நடிக்க ப்ரியங்கா சோப்ராவை தான் முதலில் ஒப்பந்தம் செய்தனர். சல்மான் கானுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று கூறி தூதுவிட்டு ப்ரியங்கா அந்த வாய்ப்பை பெற்றார். ஆனால் படப்பிடிப்பு துவங்கிய வேகத்தில் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். அதன் பிறகு க்தரீனா கைஃபை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X