Dhoni ஆமாம், தல கோபப்பட்டுடுச்சு, அதில் என்ன தப்பு?: கோலிவுட் பிரபலங்கள்
சென்னை: கூல் கேப்டன் தோனி கோபப்பட்டதை பார்த்து திரையுலக பிரபலங்கள் வியந்துள்ளனர்.
கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையேயான ஐ.பி.எல். போட்டியின்போது நோ பால் தொடர்பாக கோபப்பட்டார்.
அவர் கோபப்பட்டதை பார்த்து கியூட் என்றவர்கள் தான் அதிகம். நேற்றைய போட்டி குறித்து கோலிவுட் பிரபலங்கள் ட்வீட் செய்துள்ளனர்.
அமுதன்
இயக்குநர் சி.எஸ். அமுதன் அவர் ஸ்டைலில் பொடி வைத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார்.
சதீஷ்
திரைப்படங்களில் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும், அட ஹீரோ எப்படியும் காப்பாத்திடுவார்பா என்று நமக்கு தோன்றுமே.... அப்படித்தான் @msdhoni களத்தில் இருக்கும் போதும்.... #RealHeroDhoni #ஈடுஇணையற்றகேப்டன்தோனி என்று ட்வீட் செய்துள்ளார் சதீஷ்.
விஜயலட்சுமி
கூல் கேப்டனே கோபப்பட்டுவிட்டார் என்று வியந்து ட்வீட் செய்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.
கிரவுண்ட்
அவுட் ஆன பிறகு தோனி மீண்டும் கிரவுண்டுக்குள் வந்தது இல்லை. நேற்று தான் முதல் முறையாக வந்தார். அவர் கோபப்படத்தில் தப்பு இல்லை என்கிறார் ரியா ராஜ்.


Click it and Unblock the Notifications











