ரஜினியைச் சந்தித்தார் டோணி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் டோணி.
டோணியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தியில் அவர் பெயரிலேயே ஒரு படம் உருவாகியுள்ளது.

விரைவில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் புரமோனுக்காக சென்னை வந்துள்ளார் டோணி. சென்னை சத்யம் திரையரங்கில் இன்று மாலை செய்தியாளர்களுடன் டோணி படத்தின் சில காட்சிகளைப் பார்த்து ரசித்த டோணி, பின்னர் மேடையில் தோன்றி, "என் வழி தனி வழி" என்ற ரஜினியின் வசனத்தைப் பேசிக் காட்டினார்.
பின்னர் மாலையில் ரஜினியின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார். அப்போது டோணி படம் குறித்து ரஜினி விசாரித்து, வாழ்த்துக் கூறினார்.
ரஜினியின் மிகப் பெரிய ரசிகனான தனக்கு, சந்திக்க வாய்ப்புத் தந்து வாழ்த்துக் கூறியதற்காக ரஜினிக்கு நன்றி தெரிவித்தார் டோணி.
Comments


Click it and Unblock the Notifications