GOAT: தளபதி ’கோட்’ படத்துல ’தல’ நடிக்கிறாரா?.. தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன?

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி கேமியோ ரோலில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அது தொடர்பான சில அப்டேட்கள் கிடைத்துள்ளன.

வாரிசு படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் தோனி மற்றும் விஜய் சந்திப்பு நடைபெற்றது. அப்போதே இருவரும் இணைந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது நடக்கவில்லை.

Dhoni not acted in Vijay s GOAT movie

லியோ படப்பிடிப்பின் போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் விஜய் நடிக்கிறார் என்றும் லியோ படத்தில் ஷாருக்கான் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அது இரண்டுமே நடக்கவில்லை என்பது பின்னர் படங்கள் வெளியாகும் போது தெரியவந்தது.

சினிமாவுக்கு குட்பை: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தளபதி 69 படத்துக்கு 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலேயே எந்த ஒரு நடிகரும் வாங்காத சம்பளத்தை வாங்கப்போகும் நடிகர் விஜய் அதிரடியாக அந்த படத்துக்குப் பிறகு சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு அரசியலில் களம் காண போகிறார்.

கோட் படத்தில் தோனி: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா உள்ளிட்ட பலன் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் தளபதி விஜய் டபுள் ஆக்ஷனில் நடித்து வருகிறார். சமீபத்தில் கேரளாவில் ஐந்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் அடுத்ததாக படக்குழு ரஷ்யா செல்லப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் மாதம் நடிகர் விஜய் ஓட்டு போட வருவாரா? மாட்டாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கிடையே கோட் படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து கிரிக்கெட் வீரர் தோனி நடிக்கப் போவதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.

தோனி நடிக்கல: ஆனால், சினிமா வட்டாரத்தில் அது முழுக்க முழுக்க சோசியல் மீடியாவில் எழுப்பப்பட்ட வதந்தி தான் என்றும் தோனி விஜய்யுடன் இணைந்து நடிக்கவில்லை என்றும் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் தோனிக்கு இருந்தால் அவரது முதல் படத்திலேயே அவர் நடித்திருப்பார் என கூறுகின்றனர்.

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கிளைமேக்ஸ்: கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், தோனி அந்த காட்சியில் கேமியோ ரோலில் நடிப்பார் என வதந்திகள் தீயாக பரவ ஆரம்பித்து விட்டன. ஆனால், இந்த படத்துக்காக படக்குழுவும் தோனியை அணுகவில்லை என்றே கூறுகின்றனர்.

தோனியை நிராகரித்த விஜய்: தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த தோனி முதல் படமே தளபதி விஜய்யை வைத்து தயாரிக்க நினைத்ததாகவும் என்னுடைய சம்பளம் கட்டுப்படி ஆகாது உங்களுக்கு என நடிகர் விஜய் மறுத்து விட்டார் என்றும் அதன் காரணமாகத்தான் எல்ஜிஎம் படத்தில் ஹரிஷ் கல்யாணை வைத்து தோனி குறைந்த பட்ஜெட்டில் படத்தை தயாரித்தார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X