LGM boxoffice collection: எல்ஜிஎம் பாக்ஸ் ஆஃபிஸில் சரிவு.. இவ்ளோதான் வசூலா?
சென்னை: எல்ஜிஎம் (Let's Get Married) திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கிரிக்கெட் உலகின் தல தோனியாக வலம் வரும் எம்.எஸ். தோனி தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த நிலையில், முதல் படமாக எல்ஜிஎம் படத்தை தயாரித்துள்ளார்.
இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்கில் வெளியானது.

எல்ஜிஎம்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் தலைவனாகவே கொண்டாடி வரும் தல தோனியின் தயாரிப்பில் உருவான எல்ஜிஎம் ஜூலை 28ந் தேதி திரையரங்கில் வெளியானது. இப்படத்தில் சாக்லேட் பாயாக வலம் வரும் ஹரிஷ் கல்யாண் இந்த படத்திலும் ஐடி வேலை பார்க்கும் இளைஞனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக லவ் டுடே கதாநாயகி இவானா நடித்திருந்தார். மேலும் நடிகை நதியா நடித்திருந்தார்.
படத்தின் கதை: இதில் கௌதம் என்ற கதாபாத்திரத்தில் ஹரீஷ் கல்யாண் நடித்துள்ளார், மீராவாக இவானா நடித்துள்ளார். இரண்டு வருடமாக காதலித்து வரும் இவர்கள், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால், இவானாவுக்கு தனிக்குடித்தனம் நடித்த ஆசைப்படுகிறார். இதற்கு ஹரீஷ் கல்யாண் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
புதுவிதமான கதை: இதையடுத்து, மாமியார் மற்றும் மருமகள் இருவரும் திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கான்செப்டில் இரண்டு குடும்பத்தினரும் டூர் செல்கின்றனர். டூர் போன இடத்தில் என்ன நடந்தது, இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டார்களா என்பதுதான் எம்ஜிஎம் படத்தின் கதை. இது புதுமையான விஷயம் என்றாலும் கதைகளம் மிகவும் மெதுவாக சென்றது. அதோடு மட்டுமல்லாமல் கதையில் எந்த சுவாரஸ்யமும் இல்லை.

இரண்டாம் நாள் வசூல்: மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்கில் வெளியான Let's Get Married திரைப்படம் முதல் நாளில் வெறும் 85 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்துள்ள நிலையில், இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில் சனிக்கிழமையான நேற்று ரூ.1 கோடியை வசூலித்துள்ளது. எல்ஜிஎம் படத்திற்கு போட்டியாக வெளியான சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வருவதால், எல்ஜிஎம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications











