Dhurandhar 2: துரந்தர் 2 படத்தை பார்த்த தல தோனி.. அடடே என்ன வேகமா தியேட்டருக்குள்ள போறாருனு பாருங்க
சென்னை: இயக்குநர் ஆதித்ய தார் இயக்கத்தில் உருவாகி நடிகர் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்து வெளியான படம் துரந்தர் 2. இது ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி வெளியான துரந்தர் படத்தின் இரண்டாவது பாகம். மார்ச் 19ஆம் தேதி வெளியான இந்த படத்திற்கு இந்தியா முழுவதும் குறிப்பாக வட இந்தியாவில் அதிகப்படியான வசூல் கிடைத்து வருகிறது. இப்படி இருக்கையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக சென்னைக்கு வந்துள்ள கேப்டன் மகேந்திர சிங் தோனி துரந்தர் படத்தை சென்னை சத்யம் சினிமாஸில் பார்த்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ரன்வீர் சிங் நடித்து வெளியாகி உள்ள இந்த படம் முதல் மூன்று நாட்களில் கிட்டத்தட்ட ரூபாய் 500 கோடிகள் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் ரூபாய் 300 கோடிகளுக்கு மேல் இந்தியாவில் மட்டும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் படத்திற்கு இந்தியா முழுவதும் பரவலாக பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழ் திரையுலகில் படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் சரத்குமார் என இருவரும் படத்தை பாராட்டினார்கள்.

தெலுங்கு நடிகர்கள்: இது மட்டும் இல்லாமல் படத்தை பார்த்த அல்லு அர்ஜுன், ராம் சரண் உள்ளிட்டோர் இந்த படம் இந்திய சினிமாவின் பெருமைமிகு அடையாளம், இப்படி ஒரு படத்தைக் கொடுத்த இயக்குநர் ஆதித்ய தார் காலத்திற்கும் கொண்டாடப்பட வேண்டியவர். நாட்டுப்பற்று மிக்க ஒரு படத்தை கொடுத்ததற்கு நன்றி என்று தெரிவித்தனர்.
எதிர் விமர்சனம்: இது மட்டும் இல்லாமல் நடிகை திவ்யா ஸ்பந்தனா துரந்தர் படத்தை காட்டு மொக்கைப் படம் என்று விமர்சித்தார். மேலும் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் மிகவும் மோசமாகவும் அறிவியலுக்கு புறம்பாகவும் இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் பலர் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முட்டுக் கொடுக்கும் வகையில் இருக்கிறது என்று காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.

தோனி: இப்படி இருக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சத்யம் தியேட்டரில் துரந்தர் 2 படத்தை பார்த்தார். தற்போது அவர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள சென்னைக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











