ரியல் வெறித்தனம்.. பீஸ்ட் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று தளபதியை பார்த்த தல.. வேறமாறி வைரல்!

சென்னை: பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற தல தோனி தளபதி விஜய்யை சந்தித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும், இயக்குநர் செல்வராகவன், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

தல தளபதி சந்திப்பு

தல தளபதி சந்திப்பு

சினிமா உலகின் தளபதி விஜய் மற்றும் கிரிக்கெட் உலகின் தல தோனி இருவரும் திடீரென சந்தித்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவி வைரலாகி வருகின்றன. இருவரும் செம ஸ்மார்ட்டாக இருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் திக்குமுக்காடி போயுள்ளனர்.

பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில்

பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில்

சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோஸில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோகுலம் ஸ்டூடியோவுக்கு விசிட் அடித்த மகேந்திர சிங் தோனி நடிகர் விஜய்யை சந்தித்த புகைப்படங்கள் வேற மாறி வைரலாகி வருகின்றன.

தோனி ஏன் வந்தார்

தோனி ஏன் வந்தார்

பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீரென கிரிக்கெட் வீரர் தோனி ஏன் வந்தார்? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மீண்டும் சென்னை திரும்பி உள்ள கிரிக்கெட் வீரர் தோனி ஒரு புதிய விளம்பரப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதன் ஷூட்டிங்கும் அதே கோகுலம் ஸ்டுடியோஸில் நடைபெறுவதால் விஜய் பட ஷூட்டிங்கும் இங்கே தான் நடக்கிறது என்ற தகவல் தெரிந்ததும் உடனடியாக தளபதியை பார்க்க கிளம்பி போயிருக்கிறார் தோனி.

சிஎஸ்கே தூதர்

சிஎஸ்கே தூதர்

இந்த சந்திப்பு ஒன்று முதன் முறையல்ல. ஏற்கனவே ஐபிஎல் போட்டி இந்தியாவில் அறிமுகமான புதிதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூதராக நடிகர் விஜய் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தோனி மற்றும் விஜய் அப்பவே சந்தித்துக் கொண்ட போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

அப்படியே இருக்காங்க

அப்படியே இருக்காங்க

13 வருடத்திற்கு முன்பு ஐபிஎல் தொடங்கும் போது எப்படி இருந்தார்களோ இருவருமே அப்படியே இன்னமும் இளமையுடனும் அதே ஃபிட்னஸ் உடனும் இருக்கிறார்கள் என டிரெண்டாகும் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் கூஸ் பம்ப்ஸ் உடன் கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

ஏற்கனவே கார்த்தி

ஏற்கனவே கார்த்தி

இதற்கு முன்னதாக நடிகர் விஜய்யின் பீஸ்ட் பட ஷூட்டிங்கில் சர்தார் படத்தின் கெட்டப்பில் இருந்த நடிகர் கார்த்தி திடீரென வந்து சர்ப்ரைஸ் விசிட் கொடுத்து விஜய்யின் பாராட்டுக்களை பெற்றது ரசிகர்கள் மத்தியில் டிரெண்டானது. இந்நிலையில், கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் விஜய்யின் சந்திப்பு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது.

வரி விவகாரம்

வரி விவகாரம்

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு கார் வாங்கிய நடிகர் விஜய் நுழைவு வரி கட்டுவதற்கு விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்த விவகாரம் விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு மனக் கஷ்டத்தை கொடுத்த நிலையில், இந்த சர்ப்ரைஸ் சந்திப்பு தளபதி ரசிகர்களை சந்தோஷ வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது.

சிவகார்த்திகேயன் வரிகளில்

சிவகார்த்திகேயன் வரிகளில்

வலிமை படத்திற்கு விக்னேஷ் சிவன் பாடல் எழுதிய நிலையில், பீஸ்ட் படத்திற்கு சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுத போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் கல்யாண வயசு மற்றும் டாக்டர் படத்தில் இரு பாடல்கள் என சிவகார்த்திகேயன் எழுதியுள்ள நிலையில், நெல்சன் - சிவகார்த்திகேயனின் ஹாட்ரிக் கூட்டணி பீஸ்ட் படத்திலும் தொடர்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X