தோனிக்கு விஜய் கொடுத்த ஸ்மார்ட் ரெக்வெஸ்ட்… தளபதி 67ல் யாருமே எதிர்பார்க்காத சஸ்பென்ஸ்!
சென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67'-ல் விஜய் நடிக்கவுள்ளார்.
தளபதி 67 படத்தின் அபிஸியல் அப்டேட் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முக்கியமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

விரைவில் தளபதி 67
கோலிவுட்டின் வசூல் மாஸ்டர், ரசிகர்களின் தளபதி என கொண்டாடப்படும் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம், பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வாரிசு படத்தை முடித்துவிட்டு உடனடியாக தளபதி 67ல் இணைகிறார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள 'தளபதி 67' படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால், டிசம்பரில் தளபதி 67 அப்டேட் கண்டிப்பாக வரும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

விஜய் - தோனி பிரண்ட்ஷிப்
தளபதி 67 படத்தின் அப்டேட்டுக்காக விஜய் ரசிகர்கள் பல நாட்களாக காத்திருக்கின்றனர். இந்தப் படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தோனியும் விஜய்யும் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் சோஷியல் மீடியாக்களில் செம்ம வைரலாகின. அப்போதே இருவரும் இணைந்து ஒரு படத்தில் சூப்பராக இருக்கும் என ரசிகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் தோனி தொடங்கியுள்ள 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்திற்காக விஜய் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

தளபதி 70?
விஜய் நடிப்பில் பிரம்மாண்டமான படத்தை தோனி தயாரிக்க உள்ளதாகவும், இது விஜய்யின் 70வது படமாக இருக்கும் எனவும் சொல்லப்பட்டது. தோனியின் ராசியான எண் 7 என்பதால், விஜய்யின் 70வது படத்தை தோனி தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. அதேநேரம், ஹரிஷ் கல்யாண், பிரியங்கா மோகன் நடிப்பில் தனது முதல் தமிழ்ப் படத்தை தோனி தயாரிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தோனி தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஆனால், தோனிக்கு விஜய் ஒரு கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தளபதி 67ல் சஸ்பென்ஸ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 67 படத்தில் விஷால், சஞ்சய் தத், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட இன்னும் சில முன்னணி நடிகர்கள் வில்லனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் நடுவே தோனியையும் தளபதி 67 படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம். விஜய்க்கு வில்லனாக இல்லாமல், முக்கியமான கேரக்டரில் அவரை நடிக்க வைக்கலாம் என தெரிகிறது. விஜய்யுடன் நெருக்கமாக பழகி வரும் தோனி, கண்டிப்பாக இதற்கு சம்மதம் தெரிவிப்பார் என தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கையோடு காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











