ரூ.500 கோடி வசூலித்த தூம் 3: மீண்டும் பாக்ஸ் ஆபீஸ் 'கிங்' ஆன ஆமீர் கான்

By Siva

மும்பை: ஆமீர் கான் நடித்துள்ள தூம் 3 படம் ரூ.500 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது.

பாலிவுட்டில் அண்மை காலமாக வெளியாகும் படங்கள் வசூலில் புதிய சாதனை படைத்து வருகின்றன. ஒரு சில படங்கள் வெளியான வேகத்தில் கோடிக் கணக்கில் வசூல் செய்கின்றன.

இந்நிலையில் தான் ஆமீர் கான் நடித்த தூம் 3 படம் கடந்த மாதம் 20ம் தேதி ரிலீஸ் ஆனது.

வில்லன் ஆமீர்

வில்லன் ஆமீர்

ஹீரோவாக நடித்து வரும் ஆமீர் கான் தூம் 3 படத்தில் வில்லனாக நடித்தார். இரட்டை வேடங்களில் தனக்கே உரிய ஸ்டைலில் நடிப்பில் அசத்தி இருந்தார்.

ரூ.500 கோடி

ரூ.500 கோடி

பாலிவுட் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு படம் ரூ.500 கோடி வசூல் செய்துள்ளது என்றால் அது தூம் 3 மட்டுமே. தூம் 3 இந்தியாவில் ரூ. 351.29 கோடியும், வெளிநாடுகளில் ரூ.150.06 கோடியும் வசூல் செய்துள்ளது. இந்திய திரை உலக வரலாற்றிலும் தூம் 3 படம் தான் முதன்முறையாக ரூ.500 கோடி வசூலித்துள்ளது.

மேலும் வசூல்

மேலும் வசூல்

தூம் 3 படம் ரிலீஸாகி 19 நாட்களுக்குள் ரூ.500 கோடி வசூல் செய்துள்ளது. படம் இந்தியா தவிர வெளிநாடுகளிலும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் வசூலும் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தூம்

தூம்

தூம் படத்தில் ஜான் ஆபிரகாம் வில்லனாக வந்தார். தூம் 2 படத்தில் ரித்திக் ரோஷன் வில்லனாக நடித்தார். இந்நிலையில் தூம் 3 படத்தில் ஆமீர் வில்லனாகவும், அப்பாவியாகவும் நடித்திருந்தார். தூம் 3 ஆமீர் ஷோ என்றே கூற வேண்டும்.

3 இடியட்ஸ்

3 இடியட்ஸ்

2009ம் ஆண்டில் ஆமீர் கான், மாதவன், ஷர்மான் ஜோஷி, கரீனா கபூர் நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் படம் உலக அளவில் ரூ.339 கோடியை வசூல் செய்து புதிய சாதனை படைத்தது. இந்நிலையில் தூம் 3 படமும் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X