ரூ. 5 கோடியில் படமாக்கப்பட்ட பாலிவுட்டின் காஸ்ட்லி பாடல் ஆமீரின் 'மலாங்'
மும்பை: தூம் 3 படத்தில் வரும் மலாங் பாடல் தான் இதுவரை பாலிவுட்டில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட பாடலாம்.
ஆமீர் கான், அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா, கத்ரீனா கைஃப் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தூம் 3. இந்த படத்தில் ஆமீருடன் முதல் முறையாக கத்ரீனா ஜோடி சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் படத்தில் வரும் மலாங் பாடல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

ரூ. 5 கோடி
ஆமீர் கான், கத்ரீனா கைஃப் வரும் மலாங் பாடலை ரூ.5 கோடி செலவில் எடுத்துள்ளார்களாம். பாலிவுட்டில் இவ்வளவு செலவில் எடுக்கப்பட்ட முதல் பாடல் இது தான் என்று கூறப்படுகிறது.

கத்ரீனா
தூம் 3 படத்தில் நடிக்க கத்ரீனா கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டாராம். உடம்பை சிக்கென்று வைக்க டயட், உடற்பயிற்சி என்று மிகவும் கட்டுப்பாட்டுடன் இருந்துள்ளார்.

ஆமீர்
ஆமீர் தூம் 3 படத்தில் பார்ப்பவர்களை அசர வைக்கும் அளவுக்கு உடம்பை கும்மென்று வைத்துள்ளார். இதற்காக அவரும் டயட்டில் இருந்ததோடு கடும் உடற்பயிற்சிகளும் செய்துள்ளார்.

5 மில்லியன்
மலாங் பாடல் டீசரை இணையதளத்தில் இதுவரை 5 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். தூம் 3 படத்தில் ஆமீர் கான் சர்க்கஸில் வேலை பார்த்துக் கொண்டு பலே திருடனாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











