டிரெண்டாகும் ’தூம் 4’.. மீம்களை போட்டு கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.. ஹிரித்திக்னா மட்டும் ஓகேவாம்!

சென்னை: 'தூம் 4'ம் பாகம் தொடர்பான வதந்தி ஒன்று பரவிய நிலையில், #Dhoom4 இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.

Recommended Video

கண்ட இடங்களில் கை வைத்த இளைஞர்.. தொப்புள் தெரிய மீரா மிதுனின் செக்ஸி ஆட்டம்.. தீயாய் பரவும் வீடியோ!

பாலிவுட் ரசிகர்கள் முதல் கோலிவுட் ரசிகர்கள் வரை பல வித ட்ரோல் மீம்களை போட்டு கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

ஹிரித்திக் ரோஷனை தவிர வேறு யாரும் 'தூம் 4'ல் நடித்தால் பார்க்க மாட்டோம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

தெறிக்கவிட்ட தூம் படங்கள்

தெறிக்கவிட்ட தூம் படங்கள்

அபிஷேக் பச்சன் போலீஸ் அதிகாரியாகவும், திருடன் ஹீரோவாகவும் நடிக்கும் கதை தான் தூம் படங்களின் மையக் கருவாக இருந்து வருகின்றன. தூம் முதல் பாகத்தில் ஜான் அபிரகாம், இரண்டாம் பாகத்தில் ஹிரித்திக் ரோஷன், மூன்றாம் பாகத்தில் அமீர்கான் என ஒவ்வொரு பாகமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

தூம் 2

தூம் 2

தூம் வரிசை படங்களிலேயே ஹிரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான தூம் 2 படம் தான் உலகளவில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. ரசிகர்களுக்கு இன்றளவும் பிடித்த தூம் படமாகவும் இருக்கிறது. அமீர்கான் நடிப்பில் வெளியான மூன்றாம் பாகம் தூம் 2 அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தூம் 4

தூம் 4

இந்நிலையில், யஷ் ராஜ் சோப்ரா தயாரிப்பில் தூம் படத்தின் 4ம் பாகம் உருவாகப் போவதாக ஒரு அறிவிப்பு ஒன்று வைரலானது. மேலும், ஷாருக்கான் அல்லது அக்‌ஷய் குமார் தூம் 4ம் பாகத்தின் ஹீரோவாக நடிப்பார்கள் என்ற வதந்தி பரவிய நிலையில், #Dhoom4 என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி பாலிவுட் முதல் கோலிவுட் வரை உள்ள தூம் பட ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

இதுதான் தூம் 4 டிரைலர்

பைக்கில் சென்றபடி முன்னே செல்லும் வாகனத்தில் இருக்கும் ஓட்டையில் திருடர்கள் இருவர் லாவகமாக திருடும் வீடியோவையும், ஹெலிகாப்டரில், குறி பார்த்துக் கொண்டே சுட முடியாமல் அபிஷேக் பச்சன் தவிக்கும் வீடியோவையும் எடிட் செய்து போட்டு விட்டு, இது தான் தூம் 4ம் பாகத்தின் டிரைலர் என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

ஷாருக்கான் ரசிகர்கள்

ஷாருக்கான் ரசிகர்கள்

தூம் 4ம் பாகத்தில் ஷாருக்கான் நடிக்கப் போவதாக வைரலான அறிவிப்பை பார்த்ததும், ஷாருக்கான் ரசிகர்கள், பைக்கில் ஸ்டன்ட் செய்ய ஆரம்பித்தனர். ஆனால், அது வதந்தி என்பது தெரிந்ததும், பைக்கில் இருந்து கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டனர் என போட்டோ மீம்களை போட்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

பாகுபலி நடிகர்

பாகுபலி நடிகர்

பாகுபலி நடிகர் பிரபாஸ் தான் தூம் 4 படத்துக்கு சரியான நடிகர் என்றும், தூம் 4ம் பாகத்தில் பிரபாஸை நடிக்க வைக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கைகளை முன் வைக்க, அவர் நடிப்பில் வெளியான சாஹோ எப்படி ஓடியது என்பதைத் தான் இந்தியாவே பார்த்து சிரித்ததே என மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

உடச்சது போதாதா

உடச்சது போதாதா

தபங் மற்றும் ரேஸ் படங்களின் அடுத்த அடுத்த பாகங்களை எடுத்து படு தோல்வியாக்கியது போதாது என்று, தூம் 4ம் பாகத்தில் நடித்து இதனையும் பாழாக்க திட்டமிடுகிறார் சல்மான் கான் என அவரையும் விடாமல் வச்சு செய்து வருகின்றனர். தூம் 4 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளிவராதது குறிப்பிடத்தக்கது.

போங்கப்பா போஸ்டரே ரிலீஸ் ஆகிடுச்சு

போங்கப்பா போஸ்டரே ரிலீஸ் ஆகிடுச்சு

இந்த நெட்டிசன் கொஞ்சம் உச்சகட்டமாக சென்று, அட போங்கப்பா, தூம் 4ம் பாக போஸ்டரே வெளியாகிடுச்சு என நடிகர் அக்‌ஷய் குமார் ஹெல்மெட் அணிந்தபடி இருக்கும் காமெடி போட்டோவை போட்டு, பங்கம் பண்ணி வருகிறார். ஷாருக்கான் மற்றும் அக்‌ஷய் குமாரெல்லாம் நடிச்சா அந்த படத்தை பார்க்கவே மாட்டோம் என தூம் பட ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஹிரித்திக் ரோஷன் தான்

ஹிரித்திக் ரோஷன் தான்

தூம் 2 படத்தை பார்த்து தூம் ரசிகர்களான பல 90ஸ் கிட்ஸும் தூம் 4ம் பாகத்தில் ஹிரித்திக் ரோஷன் தான் மீண்டும் நடிக்க வேண்டும் என்றும், வேறு நடிகர்கள் நடித்தால், அந்த படம் ஓடாது என்றும் கலாய்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான வார் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை ஈட்டியதையும் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X