Dhoomam: விளையாட்டாக தொடங்கிய ஃபஹத் பாசில்... சீரியஸாக முடியும் தூமம் ட்ரெய்லர்
பெங்களூரு: ஃபஹத் பாசில் நடிப்பில் பவன் குமார் இயக்கியுள்ள திரைப்படம் தூமம்.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள தூமம் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
ஃபஹத் பாசிலும் அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ள தூமம் படம் வரும் 23ம் தேதி வெளியாகிறது.
இதனை முன்னிட்டு இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ஃபஹத் பாசிலின் தூமம் ட்ரெய்லர் வெளியானது:மலையாள திரையுலகின் மாஸ் ஹீரோவான ஃபஹத் பாசில் தற்போது பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வருகிறார். தமிழில் மாமன்னன், தெலுங்கில் புஷ்பா 2 ஆகிய படங்கள் ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ளன. இதனிடையே கன்னட இயக்குநர் பவன் குமார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்துள்ளார் ஃபஹத். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தூமம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் தூமம் படம் குறித்து அப்டேட் வெளியான நிலையில், அடுத்தடுத்து நடைபெற்றது. ஃபஹத் பாசில், அபர்ணா பாலமுரளி, ரோஷன் மேத்யூ உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தூமம் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இப்போது அதனை இன்னும் எகிற வைத்துள்ளது தூமம் படத்தின் ட்ரெய்லர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 2 மொழிகளில் தூமம் ட்ரெய்லரை வெளியிட்டது படக்குழு.
ஃபஹத் பாசிலிடம் இருந்து தொடங்கும் இந்த ட்ரெய்லர், ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்துள்ளது. புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்த விளம்பரம் பற்றி பேசுகிறார் ஃபஹத் பாசில். ஆனால், அடுத்தடுத்த காட்சிகளில் ரோஷன் மேத்யூ, அபர்ணா பலமுரளி ஆகியோர் அறிமுகமாக வேற லெவலில் வேகமெடுக்கிறது ட்ரெய்லர். இதனை வைத்து பார்க்கும் போது இந்தப் படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போதும் போல ஃபஹத் பாசிலின் நடிப்பு தரமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். மேலும் தூமம் பான் இந்தியா படமாக வெளியாவதால் ரசிகர்களிடமும் அதிக எதிர்ப்பார்ப்பு காணப்படுகிறது. லூசியா, யூடர்ன் போன்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த பவன்குமார் தான், தூமம் படத்தையும் இயக்கியுள்ளார். அதனால், இதுவும் த்ரில்லர் ட்ரீட்டாக இருக்கும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
பூர்ணாசந்திரா தேஜஸ்வி இசையமைத்துள்ள தூமம் படத்திற்கு ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் ட்ரெய்லருடன் தூமம் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வரும் 23ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து தமிழில் ஃபஹத் பாசில் நடித்துள்ள மாமன்னன் படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











