50 நாட்களில் ரூ 50 கோடியைக் குவித்த த்ரிஷ்யம்!
மலையாளத் திரையுலகில் புதிய சாதனை படைத்துள்ளது மோகன் லால் நடித்த த்ரிஷ்யம்.
வசூலிலும் சரி, பாராட்டுகளிலும் சரி, மோகன் லாலின் த்ரிஷ்யம் படம் மலலையாளத் திரையுலகில் புதிய சாதனையைப் படைத்து வருகிறது.
நான்கரைக் கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட படம் 'த்ரிஷ்யம்'. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் மோகன் லால் ஜோடியாக மீனா நடித்திருந்தார். கடந்த வருட இறுதியில் கேரளாவில் வெளியானது.

விறுவிறு திரைக்கதை
இதில் மோகன்லால் இரண்டு பெண் குழந்தைகளின் அப்பாவாக, சினிமாப் பிரியராக பள்ளிப் படிப்பைத் தாண்டாதவராக நடித்துள்ளார். இந்தப் படத்தின் திரைக்கதை வித்தியாசமாக, விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

வசூல் சாதனை
இதற்கு முன் மலையாளத்தில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த ஒட்டுமொத்த படங்களின் சாதனைகளையும் இந்தப் படம் முறியடித்துள்ளது.

50 நாட்களில் ரூ 50கோடி
'த்ருஷ்யம்' வெளியாகி 50 நாட்களே ஆன நிலையில் இப்படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவித்துள்ளனர்.

ஓமனில்...
உலகம் முழுக்க தொடர்ந்து பல நாட்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிய இப்படம் ஓமன் நாட்டில் தொடர்ந்து ஒரு மாதம் ஓடி சாதனை படைத்துள்ளது. அந்நாட்டில் இதுவரையில் எந்த ஒரு மலையாள படமும் இத்தனை நாட்கள் தொடர்ந்து ஓடியதில்லையாம்.

மூன்று மொழிகளில்
இந்தப் படத்தை இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்கிறார்கள், முன்னணி நடிகர்களை வைத்து.


Click it and Unblock the Notifications











