அப்பா பற்றி உருக்கமான போஸ்ட் போட்ட த்ருவ்: கண் கலங்கிய விக்ரம் ரசிகர்கள்

By Siva

சென்னை: த்ருவ் தனது தந்தையை பற்றி இன்ஸ்டாகிராமில் உருக்கமான போஸ்ட் போட்டுள்ளார். அதை பார்த்து விக்ரம் ரசிகர்களுக்கு கண்ணில் லைட்டா வியர்த்துவிட்டது.

த்ருவ் தனது தந்தை விக்ரமின் வழியில் நடிகராகியுள்ளார். கிரிசாயா இயக்கத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படத்தில் நடித்துள்ளார்.

Dhruvs emotional post for Appa Vikram

அவர் ஹீரோவாக அறிமுகமாகும் இந்த படத்திற்காக விக்ரம் தான் கடினமாக உழைத்துள்ளார். தனது வேலைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு மகனுடனேயே படப்பிடிப்பில் இருந்து அவரை வழிநடத்தியுள்ளார்.

இந்நிலையில் த்ருவ் தனது அப்பா குறித்து இன்ஸ்டாகிராமில் உருக்கமான போஸ்ட் போட்டுள்ளார். தனக்கு நம்பிக்கை அளித்து, ஆதித்ய வர்மா படம் சிறப்பாக வர கஷ்டப்பட்ட விக்ரமை மகன் கவுரவப்படுத்தியுள்ளார்.

எனக்கு எப்பொழுதுமே துணையாக இருந்து, உங்களுக்கு தெரிந்த அனைத்தையும் எனக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இல்லாமல் இதெல்லாம் சாத்தியம் இல்லை. நீங்கள் இந்த படத்திற்காக உழைத்தது குறித்து அறிந்த ஒருவர் டீஸரில் உங்களின் பெயர் எங்கே என்று என்னிடம் கேட்டார். என் பெயருக்கு பின்னாலேயே உள்ளது மற்றும் நான் செய்யும் அனைத்திலும் உள்ளது என்றேன். தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா. உங்களை பெருமை அடையச் செய்வேன் என்று நம்புகிறேன் என்று த்ருவ் தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கை த்ருவை வைத்து இயக்குநர் பாலா வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார். படம் முழுவதையும் எடுத்த பிறகு அது திருப்திகரமாக இல்லை என்று கூறி வேறு ஒரு இயக்குநரை வைத்து எடுக்கப் போவதாக தயாரிப்பு தரப்பில் அறிவித்தார்கள். இது என்னடா, விக்ரம் மகனுக்கு வந்த சோதனை, முதல் படத்திலேயே இப்படி ஒரு பிரச்சனையா, இதில் இருந்து மீண்டு வருவாரா என்றெல்லாம் பேச்சு கிளம்பியது.

ஆதித்ய வர்மா டீஸர் மூலம் அனைவருக்கும் பதில் அளித்துள்ளார் த்ருவ் விக்ரம். ஆதித்ய வர்மா டீஸர் சிறப்பாக வந்துள்ளது என்று அனைவருமே பாராட்டியுள்ளனர். அதிலும் குறிப்பாக த்ருவின் நடிப்பை பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மகனின் முதல் படம் சிறப்பாக வர விக்ரம் எடுத்துக் கொண்ட சிரத்தையை பார்த்து அப்பா என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று கோடம்பாக்கத்தில் பாராட்டுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X