சீயான் மகன்னா மட்டும் பாலா சும்மா விட்டுடுவாரா? #Varma
Recommended Video

சென்னை: வர்மா படத்திற்காக விக்ரமின் மகன் த்ருவ் தனது கெட்டப்பை மாற்றியுள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சீயான் விக்ரமின் மகன் த்ருவ் வர்மா படம் மூலம் ஹீரோவாகியுள்ளார். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் தான் வர்மா.
படத்தை பாலா இயக்கி வருகிறார்.
நேபாளம்
வர்மா படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2ம் தேதி நேபாளத்தில் துவங்கியது. படப்பிடிப்பு குழுவுடன் விக்ரமும் நேபாளம் சென்றுள்ளார். அங்கு அவர் ரசிகர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

புகைப்படம்
அர்ஜுன் ரெட்டி படத்திற்காக த்ருவ் தாடி, மீசை வளர்த்துள்ளார். த்ருவின் வர்மா கெட்டப் புகைப்படத்தை விக்ரம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள்
ஹேர்பேண்ட் போட்டு தாடி, மீசையுடன் இருக்கும் த்ருவின் புகைப்படத்தை விக்ரம் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கியுள்ளனர்.

பாலா
வர்மா படப்பிடிப்பு காத்மண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹீரோக்கள்
இயக்குனர் பாலாவின் படங்களில் ஹீரோக்கள் வித்தியாசமான கெட்டப்புகளில் வருவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கு த்ருவ் மட்டும் விதிவிலக்கா என்ன?


Click it and Unblock the Notifications











