சியான் 60 படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த துருவ் விக்ரம்!
சென்னை : நடிகர் துருவ் இப்பொழுது அப்பா விக்ரமுடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
Recommended Video
கர்ணன் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் கபடி கதை களத்தை கொண்ட படத்தில் வில்லேஜ் பாயாக நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என கூறியுள்ளார்.

பாலா இயக்கத்தில்
தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ள விக்ரமின் மகன் துருவ் இப்பொழுது தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி தமிழில் முதலில் பாலா இயக்கத்தில் வர்மா என்ற பெயரில் எடுக்கப்பட்டு, அதே கதையை வேற இயக்குனரை கொண்டு ஆதித்ய வர்மா என்ற பெயரில் எடுக்கப்பட்டு வெளியானது.

இருவரும் இணைந்து
முதல் படத்திலேயே பலரது பாராட்டுகளையும் பெற்ற துருவ் அடுத்தடுத்த கதைகளை அப்பா விக்ரமின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் விக்ரம் மற்றும் துருவ் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாறுமாறாக தயார்
விக்ரமின் 60வது திரைப்படமாக உருவாகும் இந்த படமானது கேங்க்ஸ்டர் கதைக்களத்தை கொண்டது என கூறப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் திரைப்படம் என்பதால் இதுக்காகவே உடலை தாறுமாறாக தயார் செய்து வைத்துள்ளார் துருவ். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க லலித் குமார் தயாரிக்கிறார்.

வாழ்க்கையை ஜமாய்போம்
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி கொண்டிருக்கும் சியான் 60 மீதான எதிர்பார்ப்பு அதிக அளவு உள்ள நிலையில் தற்பொழுது படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை துருவ் விக்ரம் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் இந்த புகைப்படம் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் எடுக்கப்பட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு போக மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். அனைவரும் எதிர்பார்த்தது போலவே எல்லாம் சரியாகி மிக விரைவிலேயே பழைய நிலைக்கு திரும்பவும். இதற்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த கொரோனாவை வென்று விரைவில் மீண்டு வருவோம் பழையபடி வாழ்க்கையை ஜமாய்போம். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











