“எனக்கு கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி”.. அப்பா மாதிரியே சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டிய துருவ்!

நடிகர் துருவ் விக்ரம் கல்லூரி மாணவிகள் மத்தியில் பாட்டுப்பாடி அசத்தினார்.

Recommended Video

'என்னக்கு ரொமான்ஸ் வராது' - Dhruv Vikram Sings to MOP College Girls

சென்னை: நடிகர் துருவ் விக்ரம் சென்னை கல்லூரி மாணவிகள் மத்தியில் பாட்டுப்பாடி அசத்தியுள்ளார்.

நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவில் நாயகனாக நடித்து வருகிறார். பல பஞ்சாயத்துகளுக்குப் பிறகு இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Dhruv sings Kalyana vayasu song in front of girls

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்ஓபி வைஷ்ணப் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துருவ் கலந்துகொண்டார். அப்போது, எக்கச்சக்கமான மாணவிகள் அவரை சூழ்ந்துகொண்டனர்.

மாணவிகள் வெள்ளத்தை கடந்து மேடை ஏறிய துருவ், கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்ற 'கல்யாண வயசு தான் வந்துடுச்சுடி' பாடலைப் பாடி அசத்தினார். மாணவிகள் உற்சாகமாக கைத்தட்டி துருவ் விக்ரமை பாராட்டினர்.

நடிகர் விக்ரமும் அருமையாக பாட்டு பாடக் கூடியவர். அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக துருவ்வும் பாட்டு பாடி அசத்தியிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

ஆனால் மாணவிகள் மத்தியில் 'கல்யாண வயசு தான் வந்துடுச்சுடி' பாடலை ஏன் துருவ் பாடினார். அப்பாவுக்கு மறைமுகமாக ஏதோ சொல்ல வருகிறாரோ என நெட்டிசன்கள் இந்த சம்பவத்தைக் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X