twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிப்பில் தந்தையை மிஞ்சும் துருவ் விக்ரம்.. மகானில் வெறித்தனமான துருவ்வை பார்க்கப்போறீங்க!

    |

    சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மகான்

    பாபி சிம்ஹா, வாணி போஜன், சிம்ரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்

    கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்க தந்தை விக்ரமை மிஞ்சும் அளவிற்கு நடிப்பில் வெறித்தனம் காட்டியுள்ளார் துருவ் விக்ரம்.

    கணவருடன் பிரச்சினை.. விவாகரத்து செய்துவிட்டாரா விஜய்டிவி பிரியங்கா? குட்டையை குழப்பிய பிரபலம்!கணவருடன் பிரச்சினை.. விவாகரத்து செய்துவிட்டாரா விஜய்டிவி பிரியங்கா? குட்டையை குழப்பிய பிரபலம்!

    வித்தியாசம் காட்டி நடிப்பதில்

    வித்தியாசம் காட்டி நடிப்பதில்

    தமிழ் சினிமாவில் சவாலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இப்போது முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் விக்ரம். விக்ரம் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் இதர தென்னிந்திய மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. சக நடிகர்கள் பலரும் நடிக்க தயங்கும் கதாபாத்திரங்களை மிக துணிச்சலாக ஏற்று நடித்து அதில் வித்தியாசம் காட்டி நடிப்பதில் விக்ரமுக்கு நிகர் விக்ரம் மட்டுமே. இந்த நிலையில் விக்ரம் இப்பொழுது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்

    இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில்

    இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பேட்டை, தனுஷுடன் இணைந்து ஜகமே தந்திரம் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் இப்பொழுது முதன்முறையாக விக்ரமுடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்திற்கு மகான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இதுவரை ஹீரோவாக மட்டும் கலக்கிக் கொண்டிருந்த விக்ரம் இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.

    ஹீரோ வில்லன்

    ஹீரோ வில்லன்

    மகாத்மா காந்தி போல அகிம்சை வழியில் வாழ வேண்டும் என பள்ளியில் ஆசிரியராக இருக்கும் விக்ரம் ஒரு கட்டத்தில் ரவுடியாக மாறி கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகிறார். இந்த நிலையில் துருவ் தந்தையை எதிர்த்து துணிந்து மோதுகிறார். தந்தை மகன் பாசம் ஒரு பக்கம், ஹீரோ வில்லன் என பக்காவான ஆக்சன் கதைக்களத்தில் உருவாக்கியுள்ள இந்த படம் கார்த்திக் சுப்பராஜின் வழக்கமான ஸ்டைலில் கேங்ஸ்டர் படமாக உருவாகி உள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்

    விக்ரமை மிஞ்சும் வெறித்தனமான நடிப்பு

    விக்ரமை மிஞ்சும் வெறித்தனமான நடிப்பு

    இரண்டாவது படத்திலேயே தந்தை விக்ரமுடன் துருவ் இணைந்து நடித்து வருவதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகிறது

    இந்நிலையில் மகான் படத்தில் தந்தை விக்ரமை மிஞ்சும் அளவிற்கு துருவ் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளாராம். பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் இப்படம் வெளியாகிறது.

    English summary
    Dhruv Vikram Acted Well than His Father Vikram in Mahaan Movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X