கோலிவுட்டின் அடுத்த காதல் ஜோடி... துபாயில் புத்தாண்டு கொண்டாட்டம்
துபாய் : ஆதித்ய வர்மா திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் துருவ் விக்ரம்.
இந்தப் படத்தில் தன்னுடைய நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார். அடுத்ததாக தன்னுடைய தந்தையுடன் மகான் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டமாக இவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் சியான் விக்ரம்
நடிகர் சியான் விக்ரம் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. மாறுப்பட்ட வித்தியாசமான கேரக்டர்களை ஏற்று நடிப்பதில் எப்போதுமே இவருக்கு விருப்பம் அதிகம்.

நடிகர் துருவ் விக்ரம்
இந்நிலையில் இவரது மகன் துருவ் விக்ரமும் தற்போது நடிக்கத் துவங்கியுள்ளார். இவரது நடிப்பில் தெலுங்கில் வெற்றி பெற்று தமிழில் ரீமேக்கான படம் ஆதித்ய வர்மா. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாகியிருந்தார் பனிதா சந்து. படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி மிகவும் பேசப்பட்டது.

புத்தாண்டு கொண்டாட்டம்
இந்தப் படத்தில் நடித்து சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்த இவர்கள் தற்போது ரியல் ஃலைபிலும் இணைந்துள்ளனர். சமீபத்தில் துபாயில் புத்தாண்டை கொண்டாடிய இவர்களின் கொண்டாட்டத்தை துருவ் விக்ரம் வீடியோவாக சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

வீடியோ வெளியிட்ட துருவ்
இந்த வீடியோவில் பனிதா புர்ஜ் கலிஃபாவை பார்க்கும்படியாக உள்ளது. மேலும் பின்னணியில் வி ஆர் கோயிங் ஹோம் என்ற பாடலும் இசைக்கப்பட்டுள்ளது. இதேபோல மற்றொரு வீடியோவில் இருவரும் இணைந்து நடனமாடி புத்தாண்டை வரவேற்கும் வகையில் அமைந்துள்ளது.

பனிதாவுடன் டேட்டிங்கில் துருவ்?
இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், இவர்கள் இருவரும் டேட்டிங்கில் உள்ளனரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தற்போது மகான் படத்தின் ரிலீசுக்காக துருவ் விக்ரம் காத்திருக்கிறார். படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

சர்ச்சையில் துருவ்
முதல் படமான ஆதித்ய வர்மா சிறப்பாக கைகொடுத்த நிலையில் அடுத்ததாக மகான் படத்தில் நடித்து முடித்துள்ளார் துருவ். அடுத்தடுத்த கதைகளையும் கேட்டு வருகிறார். தன்னுடைய அப்பாவை போலவே இவரும் பிட்னசில் சிறப்பாக காணப்படுகிறார். விக்ரம் சர்ச்சைகள் எதிலும் சிக்கிக் கொள்ளாதவர். ஆனால் துருவ் ஒன்றிரண்டு படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது சர்ச்சைக்குள் சிக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











