மாரி செல்வராஜ் படம் முடித்த கையோடு மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம்?.. கை கொடுக்குமா?

சென்னை: இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்களின் தோல்விக்குப் பிறகு ஷங்கர் இந்தியன் 3 படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார். அதே போல இந்த பக்கம் தக் லைஃப் தோல்விக்குப் பிறகு மணிரத்னத்தின் மாஸ் மவுசு அப்படியே அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. ஆனாலும், அவருக்கு அடுத்த படம் பண்ணுவதற்கான வாய்ப்பு லட்டு போல கிடைத்துள்ளதாக கூறுகின்றனர்.

சீயான் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் ஹீரோவாக வேண்டும் என சினிமாவில் என்ட்ரி கொடுக்க பாலா இயக்கத்தில் தனது மகனை அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்து அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்ய வலியுறுத்தினர்.

Dhruv Vikram next join with Maniratnam movie talks going on
Photo Credit:

ஆனால், வர்மா எனும் டைட்டிலில் உருவான அந்த படம் படத்தில் நடித்த ஹீரோவுக்கே பிடிக்காமல் போக, அதே கதையை கிரிசாயா என்பவரை வைத்து இயக்கி ஆதித்ய வர்மா படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், அந்த படமும் அவருக்கு ஃபிளாப் ஆகவே மாறியது.

அப்பாவுடன் நடித்த படமும்: அதை தொடர்ந்து அப்பா விக்ரமுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த மகான் படமும் தியேட்டரில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியானது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதுவரை பாக்ஸ் ஆபீஸில் எந்தவொரு சாதனையையும் படைக்காமல் இருந்து வரும் துருவ் விக்ரம் கண்டிப்பாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள பைசன் படத்தின் மூலம் மாஸ் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கெளதம் கார்த்திக்கை போல: கார்த்தியின் மகன் கெளதம் கார்த்திக் மற்றும் ராதாவின் மகள் துளசியை வைத்து கடல் எனும் படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். மணிரத்னத்தை பொறூத்தவரையில் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டும் தான் எடுப்பேன் என அடம்பிடிக்கும் இயக்குநர் இல்லை. இந்நிலையில், துருவ் விக்ரமை வைத்து அடுத்ததாக மணிரத்னம் தான் படம் பண்ணப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கில் ரீமேக்கா?: கில் படத்தின் ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிக்கப் போகிறார் என சில பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், அந்த படத்தின் ரீமேக்கா என்றும் கேள்விகள் கிளம்பியுள்ளன. ஆனால், அந்த படமாக இருக்காது என்றும் துருவ் விக்ரமுக்காக ஃப்ரெஷ்ஷான லவ் மற்றும் ஆக்‌ஷன் கலந்த இளமை துள்ளலான படத்தை மணிரத்னம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் சீயான் விக்ரம் ராவணா படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் - காளமாடன் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு அதிக தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X