மாரி செல்வராஜ் செய்த அட்வைஸ்?.. துருவ் விக்ரம் எடுத்த அதிரடி முடிவு?.. இது லிஸ்ட்லையே இல்லையே
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன் - காளமாடன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்தது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்ட அந்தப் படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. இந்நிலையில் அடுத்ததாக துருவ் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்த சூழலில் அவர் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
விக்ரமின் மகனான துருவ் முதலில் பாலாவின் இயக்கத்தில்தான் அறிமுகமாவதாக இருந்தார். அர்ஜுன் ரெட்டி படத்தை அவரை வைத்து ரீமெக்கும் செய்தார் பாலா. ஆனால் அவர் எடுத்ததை பார்த்த விக்ரம் தரப்புக்கு முழு திருப்தி இல்லாததால் அதை ஓரமாக வைத்துவிட்டு அதே படத்தை ஆதித்ய வர்மா என்ற பெயரில் கிரிஷாயா என்பவரை வைத்து இயக்க வைத்தார்கள். ஆனால் படம் படுதோல்வி. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமுடன் மகான் படத்தில் நடித்தார். அந்தப் படமும் விக்ரமின் படம் என்ற லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டது.
பைசன் - காளமாடன்: தான் நடித்த முதல் இரண்டு படங்களும் தனக்கு பெரிய அங்கீகாரத்தையோ, அடையாளத்தையோ கொடுக்காததால்; என்ன செய்வதென்று யோசித்த அவர்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் படத்தில் நடிக்க கமிட்டானார். இப்படத்துக்காக கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்வரை காத்திருந்து கபடி பயிற்சியெல்லாம் எடுத்தார். இப்படம் அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது.

தீபாவளிக்கு ரிலீஸ்: படமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் வெளியானது. போட்டியாக டியூட், டீசல் ஆகிய படங்களும் களமிறங்கின. எனவே இப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி துருவ்வுக்கு அடையாளத்தை பெற்றுக்கொடுக்குமா என்ற கேள்வி எழுந்திருந்தது. அதேசமயம் இயக்கம் மாரி செல்வராஜ் என்பதால் கண்டிப்பாக தரமான சம்பவம் செய்திருப்பார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் படம் பார்க்க சென்றிருந்தார்கள்.
துருவ்வுக்கு செம அங்கீகாரம்: அவர்கள் எதிர்பார்த்தபடியே மிக சிறப்பாக மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். அதேபோல் துருவ் விக்ரமின் நடிப்பும் அனைவரையும் பிரமிக்க வைத்தது. இத்தனை வருடங்கள் கஷ்டப்பட்டு பயிற்சியெல்லாம் எடுத்ததற்கு பைசன் பெரிய பலனை அவருக்கு கொடுத்தது. அவரது நடிப்பை பார்த்த பலரும் இந்தப் படத்திலிருந்துதான் துருவ்வின் திரை பயணம் தொடங்கியிருக்கிறது என்றும் கூறினார்கள்.
துருவ் விக்ரம் எடுத்த முடிவு?: பைசன் படம் மாரியை துருவ் குரு ஸ்தானத்தில் பார்க்க வைத்திருக்கிறது. இந்நிலையில் துருவ் விக்ரம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது ஹிந்தி படமான கில் படத்தின் ரீமேக்கில் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ரீமேக் படத்தில் நடிக்க வேண்டாம் என்று மாரி செல்வராஜ் செய்த அட்வைஸை கேட்டு அந்த முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டாராம் துருவ்.


Click it and Unblock the Notifications











