துருவ்க்கு பிடிச்சதும் தளபதி தானாம்... அப்பாவுக்கு அப்புறம் அவரைத்தான் பிடிக்குமாம்

சென்னை : ஆதித்ய வர்மா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார் விக்ரமின் மகன் துருவ் விக்ரம்.

இவரது நடிப்பில் தற்போது மகான் படம் ரிலீசாகியுள்ளது. படத்தில் இவரது நடிப்பு சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் தனக்கு பிடித்த நடிகர் குறித்து அவர் தற்போது பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் சிறப்பான நடிகராக அறியப்படுகிறார். கோலிவுட் என்று எடுத்துக் கொண்டால் அதில் தவிர்க்க முடியாத அங்கமாக விக்ரம் உள்ளார். இவரது நடிப்பில் வித்தியாசத்தை காட்டி அதன்மூலம் ரசிகர்களை தொடர்ந்து தன்வசம் வைத்துள்ளார்.

நடிகர் துருவ் விக்ரம்

நடிகர் துருவ் விக்ரம்

இவரது மகன் துருவ் விக்ரம் தற்போது ஆதித்ய வர்மா படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ள நிலையிலும் விக்ரமை இன்னும் இளமையாகவே பார்க்க முடிகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் அமேசான் பிரைமில் வெளியான மகான் படத்தில் அப்பா -மகன் இருவரும் இணைந்துள்ளனர்.

மகான் படம்

மகான் படம்

மகான் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படம் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. இதில் துருவ் நடிப்பும் மெச்சப்பட்டுள்ளது. விமர்சகர்கள் இவரது நடிப்பை பாராட்டி வருகின்றனர். முதல் படத்தில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது இவரது நடிப்புக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளது.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற பழமொழிக்கு ஏற்ப துருவ் விக்ரமின் நடிப்பு இந்தப் படத்தில் உள்ளது. படத்தின் பாதியில்தான் இவர் வருகிறார் என்றாலும் படத்தின் ஓட்டத்திற்கு சிறப்பான வகையில் இவர் பயன்படுகிறார். விக்ரம் தவிர்த்து இவரும் படத்தின் ஹீரோவாகவே வலம் வருகிறார்.

 துருவிற்கு பிடித்த விஜய்

துருவிற்கு பிடித்த விஜய்

இந்நிலையில் படத்தின் பிரமோஷனில் பங்கேற்ற துருவ் விக்ரம் பல்வேறு விஷயங்கள் குறித்தும் படம் குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். தனக்கு தன்னுடைய அப்பாவின் நடிப்பு மிகவும் பிடிக்கும் என்றும் அதை தவிர்த்து தமிழில் விஜய்யின் நடிப்பும் மிகவும் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X